பொது செய்தி

தமிழ்நாடு

3 ஆண்டில் 217 நீதிமன்றங்கள் துவங்க முதல்வர் அனுமதி: நாமக்கல்லில் தமிழக சட்டத்துறை அமைச்சர் பெருமிதம்

Added : ஆக 25, 2019
Advertisement

நாமக்கல்: ''மூன்று ஆண்டுகளில், 217 நீதிமன்றங்களை துவங்க, முதல்வர் அனுமதியளித்துள்ளார்,'' என, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பேசினார்.
நாமக்கல்லில், அரசு சட்டக்கல்லூரி துவக்க விழா நேற்று நடந்தது. சட்டக்கல்லூரி இயக்குனர் சந்தோஷ்குமார் திட்ட விளக்கவுரையாற்றினார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, கல்லூரியை திறந்து வைத்து பேசியதாவது: இந்த ஆண்டு, மூன்று சட்டக்கல்லூரி என்ற சொன்னவுடன், ஒன்று தேனி, மற்றொன்று சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, நாமக்கல்லில் திறக்கப்படுகிறது. 2015ல், கரூருக்கும், நாமக்கல்லுக்கும், மருத்துவ கல்லூரி கொண்டு வருவதில் போட்டி இருந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கரூருக்கு முதலில் கொண்டு வரலாம், அடுத்தாண்டு நாமக்கல்லில் மருத்துவ கல்லூரி அறிவிப்பதாக தெரிவித்தார். இதுவரை மருத்துவ கல்லூரி அறிவிக்கவில்லை. நாமக்கல்லுக்கு மருத்துவ கல்லூரி கொண்டு வரவேண்டும் என்பது கனவு திட்டம், அதை நிச்சயம் நிறைவேற்றுவோம். நாமக்கல் கூட்டு குடிநீர் திட்டம், 150 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, அப்பணி முடியும் தருவாயில் உள்ளது. திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியை சேர்த்து, 400 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டப்பணி நடக்கிறது. திருச்செங்கோடு நகராட்சியில், 85 கோடி ரூபாய் மதிப்பில், கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரியை பொறுத்தவரை, ஜெயலலிதா இருந்தபோதே, திருவள்ளூர் தொகுதிக்கும், குமாரபாளையம் தொகுதிக்கும் அறிவித்து, அதற்கு, 55 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கிவிட்டு சென்றுவிட்டார். இடம் தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டதால், காலதாமதமாகி விட்டது. மருத்துவ கல்லூரி மட்டுமே வரவேண்டும். அதையும், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் அடுத்தாண்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்வோம். இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழக சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சண்முகம், தலைமை வகித்து பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011 முதல், 2016 வரை, 223 நீதிமன்றங்களை துவக்கி வைத்தார். ஆனால், கடந்த, மூன்றாண்டுகளில், முதல்வர் பழனிசாமி, 217 நீதிமன்றங்களை துவங்க அனுமதியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களின் எண்ணிக்கை, 1,146. கடந்த, எட்டு ஆண்டுகளில் மட்டும், 440 நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 211 கோடி ரூபாய் ஒதுக்கினார். கடந்த, மூன்றாண்டுகளில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நீதித்துறையில், 1,111 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு சட்டக்கல்லூரிகள், 2008 முதல், எட்டு கல்லூரிகள் இருந்தன. அதில், 10 ஆயிரத்து, 526 ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. ஆண்டுதோறும், ஐந்து மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் வருகின்றன. இரண்டு ஆண்டுகளில், ஆறு புதிய அரசு சட்டக் கல்லூரிகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் மூலம், அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது. தனியார் சட்டக்கல்லூரிகளில், ஆண்டுக்கு, நான்கு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், அரசு சட்டக்கல்லூரியில், ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து, மொத்தம், 6,310 ரூபாய் மட்டுமே கட்டணம். இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக கலெக்டர் ஆசியா மரியம், கொ.ம.தே.க.,-எம்.பி.,சின்ராஜ், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X