பொது செய்தி

தமிழ்நாடு

ஆணவ பேச்சு தலைவர் பதவிக்கு அழகல்ல: ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ., செம்மலை அறிவுரை

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மேட்டூர்: ''ஆணவ பேச்சு, தலைவர் பதவி வகிக்கும் ஸ்டாலினுக்கு அழகல்ல,'' என, மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர், சேலம் மாவட்டம், மேட்டூரில், நேற்று அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி வெளிநாடு செல்வது, அவரது நலனுக்கா அல்லது நாட்டிற்கா என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வேண்டுமானால், தன் நலனுக்கு வெளிநாடு செல்லக்கூடும். ஆனால், தமிழக முதல்வர், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, தமிழக தொழில்வளத்தை பெருக்க, வெளிநாடு சுற்றுப்பயணம் செய்கிறார். சமீபத்தில், முதல்வர் குறித்து, ஸ்டாலின் பேசும்போது, உதவாக்கரை, துப்புகெட்ட உள்ளிட்ட கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தினார். மூத்த அமைச்சர்களில் ஒருவரான ஜெயகுமாரை, 'ஜோக்கர்' எனக்கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் தந்தை கருணாநிதி, கட்டுரையில், 'பூமாராங்' எனும் வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார். அது ஏன் என்பதை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பேசுவது, ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும். ஸ்டாலின் கொச்சையாகவும், ஆணவமாகவும் பேசுவது, அவர் வகிக்கும், தி.மு.க., தலைவர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அழகல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanagaraj Ganesan - Surat,இந்தியா
26-ஆக-201908:07:55 IST Report Abuse
Kanagaraj Ganesan பரம்பரைக்கே, நல்ல புத்தி கிடையாது சொல் புத்தியும் ஏறாது பட்டும் தெளியாத பாவிகள் குடும்பத்தினர் சாதிக் பாட்ஷா சாவே சாட்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X