நேர்கொண்ட பார்வை - அபிராமி| Dinamalar

நேர்கொண்ட பார்வை - அபிராமி

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (1)
Share
சின்னத்திரையில் தன் அசாத்திய திறமையால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற அபிராமி 'நேர் கொண்ட பார்வையில்' நடித்தது குறித்து மனம் திறக்கிறார்...* நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது பற்றிஇந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். போனி கபூர் தயாரிப்பு, அஜித் உடன் நடிப்பு, யுவன் சங்கர்ராஜா இசை என பிரபலங்களுடன்
நேர்கொண்ட பார்வை - அபிராமி

சின்னத்திரையில் தன் அசாத்திய திறமையால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற அபிராமி 'நேர் கொண்ட பார்வையில்' நடித்தது குறித்து மனம் திறக்கிறார்...

* நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது பற்றிஇந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். போனி கபூர் தயாரிப்பு, அஜித் உடன் நடிப்பு, யுவன் சங்கர்ராஜா இசை என பிரபலங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. தோழிகள், ரசிகர்கள் என்னை பார்க்கும் போது 'நேர் கொண்ட பார்வை அபிராமி' என்று அழைக்கும் போது விருது கிடைத்தது போல உணர்கிறேன்.

* உங்கள் பார்வையில் நடிகர் அஜித் எப்படிபட்டவர் ?'ஒருத்தர் கிட்ட உங்க விசுவாசத்தை காட்ட ஏன் அடுத்தவங்களை அசிங்கப்படுத்துறீங்க' என, 'நேர் கொண்ட பார்வை'யில் அஜித் பேசிய டயலாக் எனக்குள் ஆழமாக பதிந்தது. நாம் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுத்தால் நமக்கு மரியாதை தேடி வரும் என்று அவரிடம் கற்றேன்.

* உங்களுக்கு பிடித்த இயக்குனர், நடிகர் யார் ?இயக்குனர்- நேர் கொண்ட பார்வை வினோத், எனக்கு பிடித்த ஹீரோ எப்போதும் அஜித் தான்.

* படத்தில் நீங்கள் நடித்தது போல 'பார்', பார்ட்டி பழக்கம் உண்டா ?என் அம்மா உடன் தான் அதிக நேரம் செலவழிப்பேன். எனது 'சிம்பா' நாய்க்குட்டி கூட விளையாடுவேன். வீட்டுக்கு அருகில் இருக்கும் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு போவேன். மற்றபடி பார், பார்ட்டி போகும் பழக்கம் இல்லை.

* பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின் எப்படி உணர்கிறீர்கள் ?பட்டாம்பூச்சியை பாட்டிலில் அடைத்து வைத்து அதை வெளியில் திறந்து விடும்போது எப்படி இருக்குமோ அப்படி உணர்கிறேன்.

* பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேறி மீண்டும் வந்தது ?'அக்கா நீங்க சொல்றது நல்ல விஷயமாக இருந்தாலும் சொல்லும் விதம் சரியாக இல்லை எது சொல்லணும்னா என்னை தனியா கூப்பிட்டு சொல்லுங்க' அப்படின்னு வனிதாவிடம் சொல்லி இருக்கேன். அவங்க வெளியில் போயிட்டு திரும்பி வந்த பின் என்னால சில மாற்றங்களை உணர முடிந்தது. ஒவ்வொருத்தர் கிட்டேயும் அவங்கள பேச வைத்து சில கருத்துக்களை பகிர வாய்ப்பு கொடுத்தாங்க.

* பிக்பாஸ் சீசன் 3ல் யாரு ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறீர்கள் ?ஷெரின் ஜெயித்தால் சந்தோஷமா இருக்கும். தர்ஷன் ஜெயித்தாலும் சந்தோஷம் தான்

* முகேன் பெயரைச் சொன்னதும் முகத்தில் சந்தோஷம் ?முகேன்னுடன் நான் பழகிய நேரங்கள் மனதில் பசுமையாக இருக்கிறது. அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை. அவர் வெளில வந்த பின் பேசினால் தான் தெரியும். முகேனுக்கு மனதில் வேறு ஏதோ பிளான் இருக்கும் போல. எனக்கு முகேன் டபுள் ஓ.கே.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X