பொது செய்தி

இந்தியா

அரசு மரியாதையுடன் ஜெட்லி உடல் தகனம்

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டில்லியில் உள்ள நிகாபோத் காட் மயானத்தில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, அருண் ஜெட்லி, நேற்று(ஆக.,24) மதியம், 12: 07 மணிக்கு, அருண் காலமானார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மற்றும் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள்,
Nigambodh Ghat, ArunJaitley,BJP,அருண் ஜெட்லி,பா.ஜ,

புதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டில்லியில் உள்ள நிகாபோத் காட் மயானத்தில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, அருண் ஜெட்லி, நேற்று(ஆக.,24) மதியம், 12: 07 மணிக்கு, அருண் காலமானார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மற்றும் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news




இதனை தொடர்ந்து, இன்று அவரது உடல் டில்லியில் உள்ள பா.ஜ.,தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news




பின்னர், அங்கிருந்து வாகனத்தில் ஊர்வலமாக யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போதி காட் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்தன. இதன் பின்னர், துப்பாக்கி குண்டுகள் முழங்கிட, முழு அரசு மரியாதையுடன் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஜெட்லியின் சிதைக்கு, மகன் ரோஹன் தீமூட்டினார்.


வெங்கையா கண்ணீர்



latest tamil news




இறுதிச்சடங்கில், ஜெட்லி மனைவி சங்கீதா, மகள், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ராம்விலாஸ் பஸ்வான், யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர், கலந்து கொண்டனர். ஜெட்லியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா கண்ணீர் விட்டு அழுதார். இறுதிச்சடங்கின் போது டில்லியில் மழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
26-ஆக-201901:05:51 IST Report Abuse
 Muruga Vel பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் பத்திரிகையில் ஜெட்லீ இறந்த செய்திக்கு வாசகர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மிக கண்ணியமாக இருக்கின்றன ...ஆப்பு போன்ற நபர்களின் கருத்துக்கள் கண்ணியமில்லாமல் இருக்கின்றன ...
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
26-ஆக-201900:52:23 IST Report Abuse
 Muruga Vel தாண்டவக்கோன் சொல்றார் ... India's economy in deathbed now..... என்று கருத்து சொல்லறார் ....கலியாணம் பண்ணினா என்ன சொல்வார்
Rate this:
Cancel
Rajan - Chennai,இந்தியா
25-ஆக-201923:07:58 IST Report Abuse
Rajan ஜெட்லீ ஜி உங்களின் மறைவு கண்ணீரை வரவளித்துள்ளது, சூசை எஞ்சியுள்ள காலங்கள் இந்தியாவுக்காக வாழுங்கள், உங்களை இந்தியா தோளில் சுமந்து கொண்டாடும்.சூசை அவர்களே கண்ணீருடன் சித்தப்பு என்றழைக்கிறேன் இந்தியா நமது, முஸ்லீம் கிறிஸ்டின் ஹிந்து என்று எங்களை பிரிக்காதீர்கள், எங்கள் பூணலை அறுக்காதீர்கள், தேசத்தை போற்றுங்கள், உங்களை தேசம் கொண்டாடும், துரோகம் செய்யும் மார்க்க தலைவர்களை கடுமையான தண்டனை அளியுங்கள், சைக்கோ குருமா எஸ்ரா etc தூக்கி எறியுங்கள், செய்வீர்களா 😭😭😭
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X