அரசு மரியாதையுடன் ஜெட்லி உடல் தகனம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரசு மரியாதையுடன் ஜெட்லி உடல் தகனம்

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (16)
Share
Nigambodh Ghat, ArunJaitley,BJP,அருண் ஜெட்லி,பா.ஜ,

புதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டில்லியில் உள்ள நிகாபோத் காட் மயானத்தில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, அருண் ஜெட்லி, நேற்று(ஆக.,24) மதியம், 12: 07 மணிக்கு, அருண் காலமானார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மற்றும் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news




இதனை தொடர்ந்து, இன்று அவரது உடல் டில்லியில் உள்ள பா.ஜ.,தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news




பின்னர், அங்கிருந்து வாகனத்தில் ஊர்வலமாக யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போதி காட் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்தன. இதன் பின்னர், துப்பாக்கி குண்டுகள் முழங்கிட, முழு அரசு மரியாதையுடன் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஜெட்லியின் சிதைக்கு, மகன் ரோஹன் தீமூட்டினார்.


வெங்கையா கண்ணீர்



latest tamil news




இறுதிச்சடங்கில், ஜெட்லி மனைவி சங்கீதா, மகள், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ராம்விலாஸ் பஸ்வான், யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர், கலந்து கொண்டனர். ஜெட்லியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா கண்ணீர் விட்டு அழுதார். இறுதிச்சடங்கின் போது டில்லியில் மழை பெய்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X