பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் உயிரிழப்பு இல்லை: கவர்னர்

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (12)
Advertisement
Governor,Kashmir,ஆளுநர்,கவர்னர்,காஷ்மீர், சத்யபால் மாலிக்

புதுடில்லி: காஷ்மீரில் மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை எனக்கூறியுள்ள அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக், தொலைதொடர்பு முடக்கத்தால், பலரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டில்லி வந்த காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்; காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்கு மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்தவிதமான சிரமும் இல்லை. தட்டுப்பாடும் இல்லை. அனைத்து பொருட்களும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசமாக பிரித்த பின்னர் கடந்த 10 நாட்களில் எந்தவிதமான வன்முறையும் இல்லை. உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.






தொலைதொடர்பு சேவை இன்னும் எத்தனை நாட்களுக்கு முடக்கப்பட்டிருக்கும் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கவர்னர் கூறுகையில், தகவல் தொடர்பை தடுத்து வைத்திருப்பதால், உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது என்றால், இதனால், என்ன தீங்கு வந்துவிட்டது. இதற்கு முன் காஷ்மீரில் ஏதேனும் பிரச்னை, கலவரம் என்றால், முதல்வாரத்திலேயே 50 பேர் இறந்திருப்பார்கள். இப்போது, எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. எங்களின் நோக்கம் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படக்கூடாது என்பது தான்.

10 நாட்களுக்கு தொலைபேசி இணைப்பு இல்லாவிட்டால் இருக்கட்டும். விரைவில் அனைத்தையும் சரி செய்வோம். பக்ரீத் அன்று, மக்களுக்கு தேவையான இறைச்சி, காய்கறிகள், முட்டை, பால் போன்றவை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

" காஷ்மீர் கவர்னர் பொறுப்பை ஏற்கும்படி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தான் கூறினார். இது வரலாற்று சிறப்பு மிக்க பணியாக இருக்கும் என்றும் என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு கவர்னர் சத்யபால் மாலிக் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
26-ஆக-201903:41:44 IST Report Abuse
RM நம்பிட்டோம்
Rate this:
Share this comment
Cancel
25-ஆக-201921:27:47 IST Report Abuse
ஆப்பு வாழ்த்துக்கள். இப்படியே இன்னும் ஒரு வருஷம் வீட்டுக்காவல், ஊரடங்குன்னு வெச்சிருங்க. கலவரமாவது, புண்ணாக்காவது.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
25-ஆக-201920:38:48 IST Report Abuse
தாண்டவக்கோன் // உயிரிழப்பு இல்லை// அப்டின்னா 2002 குசராத் மாதிரி ஒரு 3000 அவுட் ஆயிருக்கும், அதான் ஒத்தரையும் பாக்க விட மாட்டேங்கிறார்
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
26-ஆக-201909:48:42 IST Report Abuse
THENNAVANஅவர்கள் சொந்த பாதுகாப்பில் சென்று வர தயாரா,? மேலும் நாங்கள் காஸ்மீர் செல்வது எங்களுடைய சொந்த ரிஸ்க் அதனால எங்கள் மீது நடக்கும் அசம்பாவிதங்களை மாநில மற்றும் மத்திய அரசு பொறுப்பாகாது இதை நாங்கள் சுயநினையோடு எழுதிக்கொடுக்கிறோம் என எழுதி கொடுத்துவிட்டு இவர்கள் போகட்டும் யாரும் இவர்களை தடுக்கமாட்டார்கள் .இதை இவர்கள் செய்வார்களா.அறிவு ஜீவிகளே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X