கர்தார்பூர் வழித்தடம்: பாக்., உறுதி

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
Kartarpur Corridor, India,  Pakistan, கர்தார்பூர், பாகிஸ்தான், இந்தியா,

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தால், கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அந்நாடு மறுத்துள்ளது. திட்டமிட்டபடி, வரும் நவம்பர் மாதம், இந்த பாதை செயல்பாட்டிற்கு வரும் எனக்கூறியுள்ளது.

இது தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் ஆஷிக் அவுான் கூறுகையில், ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கர்தார்பூர் வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பிரச்னை ஏற்பட்டாலும், கர்தார்பூர் வரும் சீக்கியர்களுக்கு பாகிஸ்தானின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். பிரிவினைவாதம் மற்றும் சகிப்புத்தன்மை இன்மை அதிகரித்து வரும் நிலையில், கர்தார்பூர் வழித்தடம் மரியாதை மற்றும் பொறுமை ஆகியவற்றை பரப்புகிறது. பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில், பிரதமர் இம்ரான் கான் உறுதியாக உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




பாகிஸ்தானின் கர்தார்பூரில், சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் நினைவிடம் உள்ளது. இதற்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்திலிருந்து சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. பாகிஸ்தானும் சம்மதித்தது. காஷ்மீரில் விவகாரத்தால், இரு நாட்டு உறவில், விரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
26-ஆக-201912:42:23 IST Report Abuse
சீனி லாகூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் இந்துக்கள் நேரிடையாக தனி வழி கேட்கவேண்டும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-ஆக-201922:32:33 IST Report Abuse
மலரின் மகள் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கனடா USA UK அரசுகளின் மூலமாகவும் இந்த ப்ராஜெக்ட் இல் அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானால் இந்த விஷயத்தில் பின் வாங்க முடியாது. விளைவுகள் அவர்களுக்கு தெரியும் என்று சொல்கிறார்கள். அப்படியா
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
25-ஆக-201922:18:27 IST Report Abuse
 Muruga Vel ரஷியாவிடமிருந்து அமெரிக்கா அலாஸ்காவை விலைக்கு வாங்கியதை போல கர்தார்பூர் மற்றும் லாகூரை விலைக்கு வாங்க முயற்சிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X