தங்கம் வென்றார் சிந்து: உலக பாட்மின்டனில் வரலாறு

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
PVSindhu, sindhu, BadmintonWorldChampionships, சிந்து, பிவி சிந்து,

பசல்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து.

சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-5' வீராங்கனையான இந்தியாவின் சிந்து, 4வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒகுஹராவை சந்தித்தார். முதல் செட்டை 21-7 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21-7 என தன்வசப்படுத்தினார்.


latest tamil news




மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். தவிர இது, உலக பாட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 5வது பதக்கம். ஏற்கனவே 2 வெள்ளி (2017, 2018), 2 வெண்கலம் (2013, 2014) வென்றிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudalaikkan - Mumbai,இந்தியா
26-ஆக-201912:26:40 IST Report Abuse
sudalaikkan தமிழ் கவிஞர் பாரதி கண்ட புதுமை பெண் சிந்து, தங்கம் வென்ற இந்தியா தங்க மங்கை. என் இனிய வாழ்த்துகள் . இன்னும் பல தங்க பதக்கம் வெல்ல நல் வாழ்த்துக்கள். பஹ்ரைன் கண்ணன் (சுடலைக்கண்)
Rate this:
Cancel
sudalaikkan - Mumbai,இந்தியா
26-ஆக-201912:14:27 IST Report Abuse
sudalaikkan தமிழ் கவிஞர் பாரதி கண்ட புதுமை பெண் சிந்து வென்றார் பேட்மிட்டன் உலக கோப்பை. . என் இனிய வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
sudalaikkan - Mumbai,இந்தியா
26-ஆக-201912:11:36 IST Report Abuse
sudalaikkan பாரதி கண்ட புதுமை பெண் சிந்து வென்றார் உலக கோப்பை. என் இனிய வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X