பொது செய்தி

இந்தியா

ஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம்

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (71)
Advertisement

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஒருவர் 30 ஆண்டுகாலம் ஒரே சமயத்தில் 3 அரசு பணிகளில் பணியாற்றி சம்பளம் பெற்று வந்துள்ளார்.






பீகார் மாநிலம் கிருஷணகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராம். இவர் அம்மாநிலத்தில் உள்ள பொது பணித்துறை யில் உதவி செயற்பொறியாளர், பங்கா மாவட்டத்தில் நீர் மேலாண்மைத்துறையில் அரசு அதிகாரி, பீம் நகர் பகுதியில் நீர் மேலாண்மை துறை அரசு அதிகாரி என மூன்று அரசு துறையில் பணியாற்றி வந்துள்ளார். கூடவே பணி உயர்வும் பெற்று வந்துள்ளார். கடந்தசில மாதங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதிமேலாண்மை முறையை கொண்டு வந்தது. இதன்பிறகே இவருடைய லீலைகள் தெரிய வந்துள்ளது.





இதனையடுத்து சுரேஷ் ராமை தகுந்த ஆதாரங்கள், ஆவணங்கள் உடன் நேரில் சந்திக்குமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பான்கார்டு, ஆதார் கார்டு இவைகளை மட்டுமே கொண்டு சென்று அதிகாரிகளை சந்தித்துள்ளார். மேலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பணி தொடர்பான ஆவணங்களை எடுத்து வர கூறி உள்ளனர்.

சுகாதரித்துக்கொண்ட சுரேஷ்ராம் தலைமைறைவானார். தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னரே அவர் எப்படி ஏமாற்றி வேலை வாங்கினார் என்பதும் மூன்று அலுவலகத்திலும் எப்படி ஒரே நேரத்தில் பணியாற்றினார் என்பதும் தெரிய வரும்.

போட்டி தேர்வுகளில் பங்கேற்றபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் ஒரே நேரத்தில் ஒருவர் மூன்று அரசு பணியில் 30 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
31-ஆக-201904:10:56 IST Report Abuse
oce அடக்கப்பட்டவன் தடுக்கப்பட்டவன் மடக்கப்பட்டவன் ஒடுக்கப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் என்ற தகுதிகளை வைத்தவர்களுக்கெல்லாம் பதவி கொடுத்தால் இப்படி தான் செய்வார்கள். அவர்களை கோர்டிலும் தண்டிக்க முடியாது. ஆட்டமுடியாது. அசைக்க முடியாது. ரொம்ப மிஞ்சினால் தங்களிடம் தீண்டாமையை பயன்படுத்துவதாக சொல்லி சுலபமாக தப்பித்துக்கொள்வார்கள. இதெல்லாம் காங்கிரஸ்காரன்கள் செய்த உள்ளடி வேலை. நாடு முன்னேறாமல் போவதற்கு இப்படிப்பட்ட நபர்களை அரசு நிர்வாகங்களில் பணியமர்த்துவதே காரணம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஆக-201921:32:18 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ கடந்தசில மாதங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதிமேலாண்மை முறையை கொண்டு வந்தது. இதன்பிறகே இவருடைய லீலைகள் தெரிய வந்துள்ளது. //// பிளானிங் கமிஷனை பாஜக தூக்குனதுக்கு எல்லோரும் பாய்ஞ்சாங்க ..... அதனாலதான் இப்போ இவன் பிடிபட்டிருக்கான் ..... காங்கிரஸ் அரசே இருந்திருந்தா இவன் இன்னும் கூட ஒரு வேலையில ஜாயின் பண்ணியிருப்பான் ......
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
26-ஆக-201920:08:26 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இவரின் இந்த அற்புதமான திறமையை மெச்சி மன்னித்து விட்டு விடலாம். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த மூன்று இலாகாவில் உள்ளவர்களை களை எடுத்தால் போதும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X