சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் இயந்திர கோளாறு

Added : ஆக 25, 2019
Advertisement

சென்னை:உதய்பூர் சென்ற விமானத்தில், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம், மீண்டும் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமான பைலட்டின் சாதுர்ய நடவடிக்கையால், பயணியர் உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூருக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை, 9:35 மணிக்கு, 178 பயணியருடன் புறப்பட்டு சென்றது. அந்த விமானம், நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமான பைலட் கண்டறிந்தார்.
இது குறித்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாடு அறையான, ஏ.டி.சி.,க்கு, தகவல் கொடுத்தார். ஏ.டி.சி., உத்தரவுப்படி, அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில், மீண்டும் காலை, 10:15 மணிக்கு, பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமான பொறியாளர்கள், இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டு, அந்த விமானம், 12:45 மணிக்கு, உதய்பூருக்கு புறப்பட்டு சென்றது.சரியான நேரத்தில் விமான பைலட், இயந்திர கோளாறை கண்டறிந்து, சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால், 178 பயணியரும் உயிர் தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X