அக்., 2 முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கம்: 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் மோடி அறிவிப்பு

Updated : ஆக 27, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
பிளாஸ்டிக், ஒழிப்பு,மன் கீ பாத்,மோடி ,சுதந்திர தின உரை

புதுடில்லி: ''தேசத் தந்தை மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளான, அக்., 2ல் இருந்து, பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நாட்டை உருவாக்கும் இயக்கம் துவக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டில்லி செங்கோட்டையில், இம்மாதம், 15ம் தேதி ஆற்றிய சுதந்திர தின உரையின்போது, 'பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என, பிரதமர், நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.'ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை தவிர்ப்போம்' எனவும், அவர் கூறியிருந்தார்.

தமிழகத்தில், ஏற்கனவே, பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'மன் கீ பாத்' என்ற, 'ரேடியோ' மூலம் பிரதமர் நரேந்திர மோடி, மக்களிடையே உரையாற்றும் மாதாந்திர நிகழ்ச்சி, நேற்று ஒலிபரப்பானது. அதில், மோடி கூறியுள்ளதாவது: இந்தாண்டு, அக்., 2ல், மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை கொண்டாட உள்ளோம். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாட்டை அவருக்கு சமர்ப்பிப்பதுடன், பிளாஸ்டிக்குக்கு எதிரான புதிய உறுதிமொழியை, இயக்கத்தை, நாடு முழுவதும் மக்கள் ஏற்க வேண்டும்.


விடுவிப்போம்



அவருடைய பிறந்த நாளில், நம் நாட்டை, பிளாஸ்டிக்கில் இருந்து விடுவிப்போம். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை, ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், கிராம பஞ்சாயத்துகள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்வது அல்லது அதில் இருந்து எரிபொருள் தயாரிப்பது அல்லது எப்படி பாதுகாப்பாக அழிப்பது என்பது குறித்து, தொழில் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும்.


கோரிக்கை



அக்., 27ல் தீபாவளி பண்டிகையை கொண்டாடு வதற்குள், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பாது காப்பான முறையில் அழிக்க வேண்டும். இந்த உறுதிமொழியை ஏற்பதுடன், இதை செயல் படுவதற்கு, மஹாத்மா காந்தியைத் தவிர, வேறு ஒரு ஊக்க சக்தி இருக்க முடியுமா.சுதந்திர தின உரையின்போது, பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

நாடு முழுவதும் வியாபாரத்தில் ஈடுபடுவோர், என்னுடைய கோரிக்கையை ஏற்று, பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை விற்பதை குறைத்துள்ளதாக தகவல்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும், 'துாய்மையே சேவை' இயக்கம், இந்தாண்டு, செப்., 11ல் துவங் கும். அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, மோடி உரையாற்றினார்.


பியர் கிரில்சுடன் ஹிந்தியில் பேசியது எப்படி?'



டிஸ்கவரி சேனலில்' சமீபத்தில் ஒளிபரப்பான, 'மேன் வர்சஸ் வொயில்ட்' நிகழ்ச்சியில், அதை தொகுத்து வழக்கிய, பியர் கிரில்ஸ் உடன், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, ஜிம் கார்பட் தேசிய பூங்காவில் நடந்த இந்த சாகச பயணத்தின்போது, பிரதமர் மோடி, ஹிந்தியில் பேசினார். கிரில்ஸ் ஆங்கிலத்தில் பேசினார். மோடி பேசியது, கிரில்சுக்கு எப்படி புரிந்தது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

'மன் கீ பாத்' ரேடியோ நிகழ்ச்சியில், இது குறித்து மோடி கூறியதாவது:நான் ஹிந்தியில் பேசியது, கிரில்சுக்கு எப்படி புரிந்தது. இது ஏற்கனவே படம் பிடிக்கப்பட்டு, அவருக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப் பட்டதா என, பலரும் கேட்டனர்.தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்கு உதவியுள்ளது. கிரில்ஸ் காதில், ஒரு சிறிய கருவி வைத்திருந்தார். நான் ஹிந்தியில் பேசியதை, அந்தக் கருவி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும். அதனால் தான், பிரச்னை இல்லாமல் இந்தப் பயணம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, வனப் பகுதிகளில் சாகச பயணம் மேற்கொள்ளும் ஆசை, பலருக்கும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.நான் பலமுறை கூறியதைப் போல,வட கிழக்கு மாநிலங் களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள்; பல புதிய அனுபவங்களை பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C. Vijayadhas - Chennai,இந்தியா
26-ஆக-201918:48:16 IST Report Abuse
C. Vijayadhas பாக்கெட் க்கு மாற்று சொல்லிவிட்டு தடை செய்யலாமே? பால் பாக்கெட் க்கு மாற்று? சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் மளிகை பொருள் பாக்கெட் க்கு மாற்று.. இன்னும் பல..
Rate this:
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
26-ஆக-201905:40:35 IST Report Abuse
sathiya narayanan தூய்மை இந்திய வெற்றி பற்றி தெரிவித்து அடுத்தது ஆரம்பிக்கலாம். எல்லாமே அறிவிப்பாக இருந்தால் என்ன செய்வது
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
26-ஆக-201904:14:17 IST Report Abuse
blocked user சுற்றச்சூழலுக்கு பிளாஸ்டிக் ஏராளமான கெடுதல்களை மட்டுமே செய்ய வல்லது. ஏற்கனவே செய்யப்பட சேதம் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X