ரூ.2,000 கோடி மோசடி வழக்கில் திருப்பம்; கர்நாடகா, 'மாஜி' முதல்வர் சிக்குகிறார்?

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
ரூ.2,000 கோடி மோசடி வழக்கில் திருப்பம்; கர்நாடகா, 'மாஜி' முதல்வர் சிக்குகிறார்?

பெங்களூரு:ஐ.எம்.ஏ., நிதி மோசடி வழக்கில், கர்நாடகா முன்னாள் முதல்வர் ஒருவருக்கு, 25 கோடி ரூபாய் பேரம் பேசி, 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துஉள்ளது.

பெங்களூரு, சிவாஜி நகரை தலைமையிடமாக வைத்து இயங்கி வந்த, ஐ.எம்.ஏ., குழும நிதி நிறுவனம், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம், பணம் பெற்று, மோசடி செய்தது. இதில், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில், ஐ.எம்.ஏ., குழும நிறுவனர், முகமது மன்சூர் கான், 57, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவிடம், கர்நாடகா அரசு ஒப்படைத்திருந்தது. முதலீட்டாளர்கள் சிலர், இவ்வழக்கில், மாநில அதிகாரிகள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளதால், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


சி.பி.ஐ., விசாரணை

இவ்வழக்கு, கடந்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடகா அரசு, ஏற்கனவே இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிஉள்ளதாக அறிவித்தது. செப்., 9க்குள், பூர்வாங்க விசாரணையை முடித்து, முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை, சி.பி.ஐ.,யிடம், எஸ்.ஐ.டி., ஒப்படைத்தது. அதில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் உடைய விசாரணை அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விபரங்கள்:முன்னாள் முதல்வர் ஒருவர், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், 25 கோடி ரூபாய் கேட்டதாகவும், முதல்கட்டமாக, 5 கோடி ரூபாய், மூன்று நபர்கள் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.பெங்களூரு மாவட்ட கலெக்டராக இருந்த, விஜய்சங்கர், காங்கிரசின் முன்னாள் அமைச்சர்கள், ரோஷன் பெய்க், ஜமிர் அகமது கான் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர். பெங்களூரு முன்னாள் போலீஸ் கமிஷனர், அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் தலைவர்கள் சிலரும் பணம் பெற்று உள்ளனர்.

நிஜாமுதின் என்ற நபர் மூலம், பா.ஜ., தலைவர் ஒருவருக்கு பணம் வழங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான தொலைபேசி உரையாடல், குறுந்தகவல் அனைத்தும், 'வாட்ஸ் ஆப்' என்ற, மொபைல் போன் செயலி மூலம் நடந்துள்ளது. அந்த ஆதாரங்களும் அழிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


25 பேர் கைதுசி.பி.ஐ., விசாரணையில், பெரும்பாலான தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னாள் முதல்வருக்கு பணம் கைமாறியது உண்மை என, தெரியவந்துள்ளது.எஸ்.ஐ.டி., வழங்கியுள்ள அறிக்கையில் சில மாற்றங்கள் செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.இந்த மோசடி தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனத்துக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பு உள்ள சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
27-ஆக-201904:01:20 IST Report Abuse
G.Prabakaran காங்கிரஸில் உள்ளவர்களின் பெயர்களை போடும் போது முன்னாள் முதல்வர் பாஜக என்றால் அவர் பெயரை போட ஏன் தயக்கம்.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
26-ஆக-201912:08:10 IST Report Abuse
Jayvee எடியூரப்பாவிற்கு கஷ்டகாலம் ஆரம்பித்துவிட்டதா ?
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-ஆக-201915:59:42 IST Report Abuse
கல்யாணராமன் சு.முன்னாள் முதல்வர்னுதானே போட்டிருக்கு? இன்னாள் முதல்வர் தானே எடி??...
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
27-ஆக-201912:30:51 IST Report Abuse
Chowkidar NandaIndia2018 தேர்தலின்போது முதல்வராக இருந்தது சித்தன் தானே. அப்போது அதிகாரத்திலிருந்த அவர்தானே கமிஷன் கேட்டிருக்க முடியும்? இதில் எடியூரப்பா எங்கிருந்து வந்தார்?...
Rate this:
Ganesh - Chennai,இந்தியா
30-ஆக-201902:33:39 IST Report Abuse
Ganeshஒதுக்க முடியல...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஆக-201911:30:34 IST Report Abuse
RajanRajan கூட்டுகொள்ளை - பங்கீடு முறை காங்கிரஸின் ஒருமுக கொள்கை என்பது பலமுறை நிருபிக்க பட்டுள்ளதே.
Rate this:
Ray - Chennai,இந்தியா
27-ஆக-201905:43:19 IST Report Abuse
Rayபாஜவுக்கும் பங்கு போயிருக்கே ஒற்றைக் கண்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X