பொது செய்தி

இந்தியா

மண் குவளைகள் பயன்படுத்த மத்திய அமைச்சர் அறிவுரை

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
 மண் குவளைகள் பயன்படுத்த மத்திய அமைச்சர் அறிவுரை

புதுடில்லி:'நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மற்றும் வணிக வளாகங்களில், 'பிளாஸ்டிக் கப்' பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து, மண்ணால் ஆன குவளைகள் பயன்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


கடிதம்


மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நடுத்தர, சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்கரி, ௬௨, இதுகுறித்து வலியுறுத்தி, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதிஉள்ளார். அவர் கூறியதாவது:முக்கிய, 200 ரயில் நிலையங்களில், இந்த ஆண்டில், மண் குவளைகள், தட்டுகளையே கட்டாயம் பயன்படுத்த உத்தரவிட வலியுறுத்தி, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதிஉள்ளேன். அதுபோல, விமான நிலையங்கள், மாநில போக்குவரத்து கழகங்கள் நடத்தும் டீக்கடைகள் போன்ற இடங்களில், மண் குவளைகளை பயன்படுத்த வலியுறுத்தி உள்ளேன்.


சுற்றுச்சூழல்


இதனால், ஏழை மண் பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்; பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறையும்; சுற்றுச்சூழல் மேம்படும்.மண் குவளைகளுக்கான தேவைகள் அதிகரிக்கும் போது, அவற்றை அதிக எண்ணிக்கையில் தயாரிப்பதற்கான கருவிகளை தயாரிக்குமாறு, காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் கமிஷனை கேட்டுக் கொண்டுஉள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த ஆண்டில், மின்சாரத்தால் இயங்கும், 10 ஆயிரம் மண் பாண்ட தயாரிப்பு சக்கரங்களை தயாரித்து வழங்கினோம். இந்த ஆண்டில், 25 ஆயிரமாக அவற்றை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன்.வினய்குமார் சக்சேனா, தலைவர், காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் கமிஷன்.


லாலு திட்டம்


கடந்த, 2004 ல், ரயில்வே அமைச்சராக இருந்த, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத், 71, ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும், பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப் பயன்பாட்டிற்கு தடை விதித்து, மண் குவளைகளில் தான் சூடான பானங்களை வழங்க வேண்டும் என, உத்தர விட்டார்.எனினும், அதை சரியான முறையில் அமல்படுத்தவில்லை. இப்போது, உ.பி.,யின் வாரணாசி மற்றும் ரே பேரலி ரயில் நிலையங்களில் மட்டும் தான், மண் குவளைகளில் தேனீர் மற்றும் சூடான பானங்கள் வழங்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஆக-201914:18:14 IST Report Abuse
ஆப்பு இதெல்லாம் எதுக்கு? அவங்கவங்களுக்குத் தேவையான டம்ளர், தட்டுக்களை கொணாந்துருங்க. கழுவி எடுத்துக்கிட்டு போங்க. இல்லேண்ணா வீட்டிலிருந்து ஃப்ளாஸ்க்குல டீ போட்டு கொண்டாந்துருங்க. ரயில்லே சில இடங்களில் கக்கூஸ் தண்ணீல டீ போடறாங்களாம்.
Rate this:
Cancel
swega - Dindigul,இந்தியா
26-ஆக-201914:00:03 IST Report Abuse
swega ரோட்ல உடைச்சிப்போட்டுட்டு போவான். அது நாலு பெரு கால கிழிக்கிறதுக்கா? எந்த மண் குவளையையும் கழுவாம பயன்படுத்தமுடியாது. அத கழுவுவானுகளா இல்ல எந்த தண்ணியில கழுவுவானுக?
Rate this:
Cancel
26-ஆக-201911:31:38 IST Report Abuse
மதுவந்தி நடுத்தர, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மண் குவளை மண் பாண்டங்கள் சொல்லாமலே பயன் படுத்து பவர்கள் தான். Born with silver spoon காரர்களுக்கு சொல்லிப் பயன் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X