டெக்சாஸ்:அமெரிக்காவில், திருமணம் முடிந்த, சில நிமிடங்களில், விபத்தில் மணமக்கள் பலியானது, உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, ஆரஞ்ச் என்ற நகரில், உயர்நிலைப் பள்ளியில் படித்தவர், ஹார்லே, 19; சக மாணவியான, ரிஹியான்னான், 20, என்பவரை காதலித்தார். உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை, அங்குள்ள, 'சர்ச்'சில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும், அதை பதிவு செய்ய, நீதிமன்றத்திற்கு சென்றனர். அங்குள்ள நடைமுறைகளை முடித்து, மணமக்கள் இருவரும், காரில் வீட்டுக்கு திரும்பினர். காரை, மணமகன் ஹார்லே ஓட்டினார்; மணமகள் ரிஹியான்னான் உடன் இருந்தார். உறவினர்கள், தங்களின் வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.சில வினாடிகளிலேயே, ஹார்லேவின் கார், சாலையின் திருப்பத்தில், எதிரே வந்த லாரியுடன் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மணமக்கள் இருவரும் பலியாகினர். லாரி ஓட்டுனருக்கு சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை. உறவினர்கள் கண் முன், இந்த கோர விபத்து நிகழ்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE