நெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., பாய்ச்சல்

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
 நெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., பாய்ச்சல்

இஸ்லாமாபாத்:''இந்தியா, நெருப்புடன் விளையாடுகிறது,'' என, பாகிஸ்தான் அதிபர், அரிப் அல்வி அலறியுள்ளார்.

கனடா நாட்டின், 'வைஸ் நியூஸ்' என்ற செய்தி நிறுவனத்திற்கு, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ள இந்திய அரசு, நெருப்புடன் விளையாடுகிறது. அந்த நாட்டின், மதசார்பற்ற தன்மை, அந்த நெருப்பில் எரிந்து அழியும்; காஷ்மீர் கொந்தளிக்கும்.காஷ்மீர் பிரச்னையை, இத்தனை காலமாக, இரு தரப்பு விவகாரம் என கூறி, இந்தியா ஏமாற்றி வந்தது. அதை நாங்கள், சர்வதேச பிரச்னையாக ஆக்கி விட்டோம். எத்தனை காலத்திற்கு தான் ஏமாற்ற முடியும். இப்போது, காஷ்மீர் விவகாரம், சர்வதேச அளவில் பேசப்படுகிறது.காஷ்மீரில் பயங்கரவாதத்தை, இந்தியா தான் துாண்டி விடுகிறது. காஷ்மீரின் புல்வாமாவில் நடந்தது போன்ற தாக்குதலை, பாகிஸ்தானில் நிகழ்த்த, இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடன் போரை, பாகிஸ்தான் துவக்காது. இந்தியா துவக்கினால், எங்களை பாதுகாப்பது எங்களின் உரிமையாகி விடும்.இவ்வாறு, அதிபர் அல்வி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sripa - muscat,ஓமன்
27-ஆக-201917:11:18 IST Report Abuse
sripa இவர் மிகவும் பயந்து போயுள்ளார். இவரது இந்த பதிவும் அவரது பயத்தின் வெளிப்பாடுதான். இவ்ரகள் எல்லோரும் அறிவு இல்லாத மூடர்கள். மோடியின் முன்னால் இவர்கள் எறும்பை போன்றவர்கள். மோடி அவர்களை தன் காலில் நசுக்கி விடுவார். ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
26-ஆக-201911:29:25 IST Report Abuse
Ashanmugam யார் நெருப்பு, நீர் என்று பாகிஸ்தான் "தில்" இருந்தா மோதி பார்க்கட்டும். இதன் விளைவு பாகிஸ்தான் உலக வரை படத்திலே இருக்காது. சும்மா வெத்து பேச்சு, வீராப்பு வசனம், அரை வேக்காடு போல இந்தியாவிற்கு எதிராக சவால் விடக்கூடாது.
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா பெரிய பத்தினி சாபம் விடுறாரு. போய் உங்க ஊரு தீவிரவாதத்தில் எரியாமல் பார்த்துக்கொள்ளவும். ஆட்றாமையின் பொருமல் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X