கொலை செய்யப்பட்ட மாடல்அழகி உடல் பெங்களூரில் தோண்டி எடுப்பு

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
 கொலை செய்யப்பட்ட மாடல்அழகி உடல் பெங்களூரில் தோண்டி எடுப்பு

பெங்களூரு:வாடகை கார் ஓட்டுனர் கொலை செய்த, முன்னாள் மாடல் அழகி சடலத்தை, நீதிமன்ற அனுமதியுடன் தோண்டியெடுத்த அவரது குடும்பத்தினர், சம்பிரதாயப்படி தகனம் செய்து, அஸ்தியை கோல்கட்டா கொண்டு சென்றனர்.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில தலைநகர், பெங்களூரில், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் பின்புற வாயில் அருகில், ஜூலை, 31ல், இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இவர் யார் என அடையாளம் தெரியாததால், சடலத்தை, 12 நாட்கள் வரை, சவக்கிடங்கில் போலீசார் வைத்திருந்தனர்; அதன் பின் புதைத்து விட்டனர்.இந்நிலையில், கொலையானவர், கோல்கட்டாவைச் சேர்ந்த, முன்னாள் மாடல் அழகி, பூஜா சிங் என்பதும், அவரை பணத்துக்காக, 'ஓலா' வாடகை கார் டிரைவர், நாகேஷ் என்பவர் கொலை செய்ததும், விசாரணையில் தெரிய வந்தது.பெங்களூரில், தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பூஜா சிங் வந்திருந்தார். ஜூலை, 30ம் தேதி இரவு, டில்லிக்கு செல்ல, கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு செல்வதற்காக, ஓலா கார் பதிவு செய்திருந்தார்.காரில் சென்ற பூஜா சிங்கிடம், விமான நிலையத்தின் பின்புற வாயில் அருகில், பணத்தை கொள்ளையடிக்க, கார் ஓட்டுனர், நாகேஷ் முயற்சித்தார்.அவருடன் பூஜா சிங், சண்டை போட்டதால், கத்தியால் குத்தி, நாகேஷ் கொலை செய்தார்.பூஜா சிங்கின் அடையாளம் தெரியாமல் இருக்க, சிமென்ட் கல்லை தலையில் போட்டார். பின், பூஜாவின் பை, மொபைல் போன், கோல்கட்டாவுக்கு செல்ல அவர் வைத்திருந்த விமான டிக்கெட் உள்ளிட்டவற்றை திருடி, தப்பினார். இதை, விசாரணையில் நாகேஷ் ஒப்புக் கொண்டார்.பூஜா சிங் கொலையான தகவல், கோல்கட்டாவில் உள்ள, அவர் கணவர், சவுதீப் டே மற்றும் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. இவர்கள் பெங்களூரு வந்து, கொலையானது பூஜா தான் என்பதை அடையாளம் காண்பித்தனர்.தங்கள் சம்பிரதாயப்படி சடலத்தை எரிக்க வேண்டுமென, பூஜாவின் குடும்பத்தார் கூறினர். இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன், சடலத்தை தோண்டியெடுத்த போலீசார், பூஜாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.அவர்கள் தங்கள் சம்பிரதாயப்படி, பூஜா சடலத்தை தகனம் செய்த பின், அஸ்தியை கோல்கட்டாவுக்கு கொண்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-செப்-201919:33:36 IST Report Abuse
Rasheel பெங்களூரு நகரம் தனியாக இருக்கும் பெண்களுக்கு ஆபத்தானது.
Rate this:
Cancel
Jawaharr Kb - CHENNAI,இந்தியா
30-ஆக-201913:30:01 IST Report Abuse
Jawaharr Kb பெண்கள் (இளம் பெண்கள், வயதானவர்கள்) ஓலா உபேரில் வெளியே செல்லும் பொழுது வீட்டில் அல்லது தெரிந்தவருக்கு தங்கள் பயணம் விவரம் பற்றி ஷேர் பண்ணலாம், இன்னும் பாதுகாப்பானது ....
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
30-ஆக-201904:50:54 IST Report Abuse
 nicolethomson இன்றைய காலகட்டத்தில் உபேர் , ஓலா , ஸ்மோடோ , ஸ் விகி என்று யாரை பார்த்தாலும் பயம் வரும்படியாகத்தான் ஓட்டுகிறார்கள் , அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் கம்பெனிகள் எடுப்பதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X