சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பட்டினம் பாம்பாற்றில் மணல் கொள்ளை அதிகரிப்பு

Added : ஆக 25, 2019
Share
Advertisement

திருவாடானை : எஸ்.பி.பட்டினம் அருகே பாம்பாற்றில் மணல் கொள்ளை அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.எஸ்.பி.பட்டினம் அருகே பாம்பாறு உள்ளது. இங்கு தினமும் ஏராளமான லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் திருடப்படுகிறது. இது குறித்து சோழகன்பேட்டை கிராமத்தினர் கூறியதாவது: எஸ்.பி.பட்டினம், மருங்கூர், சோழகன்பேட்டை, அரசப்பகுடியிருப்பு, புதுக்காடு உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக இந்த ஆறு செல்கிறது.

இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் காலங்களில் ஆற்றில் ஊறும் நீரை சேகரித்து பயன்படுத்தி வருகிறோம். சில நாட்களாக மணல் திருட்டு அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எஸ்.பி.பட்டினத்திலிருந்து 2 கி.மீ. துாரத்தில் புதுக்கோட்டை மாவட்ட எல்கை ஆரம்பமாவதால் புதுக்கோட்டை, பட்டுகோட்டை, தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லாரிகளில் மணல் திருடி செல்கின்றனர்.

நள்ளிரவில் மணல் திருடுவதால் கிராம மக்கள் சென்று தடுக்க முடியவில்லை. மணல் அள்ளும் இயந்திரம் மூலம் பல அடி ஆழத்திற்கு தோண்டுவதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கபட்டுள்ளது. மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X