எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதுக்கல் எதிரொலி வெங்காயம் விலை உயர்வு

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 பதுக்கல், எதிரொலி,வெங்காயம், விலை, உயர்வு

வியாபாரிகள் பதுக்க துவங்கியுள்ளதால், வெங்காயத்தின் விலை, கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.

மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.இந்த மாநிலங்களில், பலத்த மழை காரணமாக, வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் மட்டுமே சந்தைக்குவிற்பனைக்கு வருகிறது.தட்டுப்பாடு காரணமாக, வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், அதிக லாபம் பெறும் நோக்கில், அவற்றை பதுக்கும் நடவடிக்கைகளை, மொத்த வியாபாரிகள் துவக்கி உள்ளனர். இதனால், வெங்காயத்தின் விலை, நாடு முழுவதும், கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில், ஒரு கிலோ, 25 ரூபாய் வரை விற்கப்பட்ட வெங்காயம், நேற்று, 35 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தர வெங்காயம், 25 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. பதுக்கல் தொடரும் பட்சத்தில், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகைக்குள், வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.'வெங்காயத்தை பதுக்கி வைத்தாலோ, லாபகரமான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் வெங்காய பதுக்கலை கண்காணிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் இன்னும் துவங்கவில்லை.இதுவே, விலை உயர்வுக்கு காரணம் என, சென்னை கோயம்பேடு வெங்காய வியாபாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து பண்டிகைகள் வருவதால், வெங்காய விலையை கட்டுக்குள் வைக்கவேண்டிய நடவடிக்கையை, அரசு துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
26-ஆக-201912:36:38 IST Report Abuse
த.இராஜகுமார் டாஸ்மார்க்கை அரசு நடத்துவதுபோல விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் இடை தரகர்கள் முறை ஒழிக்கவேண்டும்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-ஆக-201908:07:48 IST Report Abuse
ஆரூர் ரங் முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் நல்ல வெங்காயம் கிடைக்காது.குறிப்பிட்ட சீசனில் மட்டுமே தரமான வெங்காயம் கிட்டும்.அதோடும் மக்கள் வாழ்ந்து கொண்டுதானிருந்தார்கள் இப்போது ஆண்டுமுழுவதும் விரும்பும் உணவுப்பொருட்களெல்லாம் கிடைக்கவேண்டும் என்ற பொதுமக்களின் பிடிவாதத்தால் கூடுதல்விலை குறைந்த தரம் என்றாகிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X