சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிடிபட்டது ஆட்கொல்லி யானை

Added : ஆக 25, 2019
Advertisement
 பிடிபட்டது ஆட்கொல்லி யானை

ஓசூர்:ஓசூர் வனப்பகுதியில், ஆட்டம் காட்டி வந்த ஆட்கொல்லி யானையை, பல மணி நேரம் போராடி, மயக்க ஊசி மூலம், நேற்று வனத்துறையினர் பிடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, 'குரோபர்' என்ற ஆட்கொல்லி ஆண் யானை, கடந்த மாதம், மற்றொரு ஆண் யானையுடன், வனத்தை விட்டு வெளியேறியது.கடந்த, 14ம் தேதி, கர்நாடக மாநில எல்லைக்கு சென்ற யானை, விவசாயி அன்னையப்பா, 50, என்பவரை தாக்கி கொன்று, மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்தது.தொடர்ந்து, மக்களை தாக்கி வந்த இந்த யானை, தன்னுடன் வந்த மற்றொரு யானையை, கூட்டத்துடன் சேர விடாமல் தடுத்து வந்தது. இதனால், அந்த யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, கோவை மாவட்டம், டாப்சிலிப்பில்இருந்து, 'மாரியப்பன், பரணி' என்ற இரு, 'கும்கி' யானைகள் வரவழைக்கப்பட்டன.

கடந்த, 20ம் தேதி, பேரண்டப்பள்ளி வனத்துக்கு குரோபர் யானை வந்தது. இரண்டு நாட்களாக, பல மணி நேரம் போராடியும், அந்த யானைக்கு, மயக்க ஊசி செலுத்த முடியவில்லை.நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர், யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். கால்நடை டாக்டர்கள் குழுவினர், காலை, 6:30 மணிக்கு, குரோபர் யானைக்கு, முதல் மயக்க ஊசியை செலுத்தினர். அதனுடன் இருந்த மற்றொரு யானையை, பட்டாசு வெடித்து, தனியாக விரட்டினர்.
தொடர்ந்து, இரு மயக்க ஊசிகள் செலுத்தியும், யானை நடந்து கொண்டிருந்தது. வனத்துறையினர் போராடி, அதன் காலில் கயிற்றை கட்டினர். யானையின் நடமாட்டத்தை, மொபைல் போன் மூலம் அறிய, அதன் கழுத்தில், 'காலர் ஐ.டி.,' பொருத்தப்பட்டது.கும்கி யானைகள் மாரியப்பன், பரணி மற்றும் பொக்லைன் உதவியுடன், காலை, 11:30 மணிக்கு லாரியில், யானையை ஏற்றினர்.இதே யானைக்கு, கடந்தாண்டு மயக்க ஊசி செலுத்தி, பிலிகுண்டுலு பகுதியில் விட்ட போது, மூன்றே நாட்களில் திரும்பி வந்தது. அதனால், யானையின் உடல்நிலையை அறிந்த பின், அடர்ந்த வனப்பகுதியில் விட இருப்பதாக, ஓசூர் வனக்கோட்ட அலுவலர், தீபக் பில்கி கூறினார். யானையை முதுமலைக்கு அழைத்து செல்வதாக, வனத்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X