சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலச்சரிவு பகுதியில், 'திக் திக்' பயணம்

Added : ஆக 25, 2019
Advertisement
 நிலச்சரிவு பகுதியில், 'திக் திக்' பயணம்

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் மற்றும் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில், 8ம் தேதி பெய்த கனமழையில், தமிழக - கேரளா எல்லையை ஒட்டிய, கீழ்நாடுகாணி சாலையில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், இரு மாநில போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தமிழக எல்லை, தகரபாறா மற்றும் கேரள எல்லை, தேன்பாறா ஆகிய இரு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, 750 மீ., இரு மாநில பயணியர் நடந்து செல்கின்றனர். இதில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஏறி, இறங்கி செல்லும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், சிரமத்தை சந்திக்கின்றனர்.பயணியர் கூறுகையில், 'நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. தனியார் வாகனங்களில், கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கிறோம். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் வரை பஸ்கள் இயக்கவும், இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X