சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவரில் துளையிட்டு ரூ.2.50 லட்சம் திருட்டு

Added : ஆக 26, 2019
Advertisement
 சுவரில் துளையிட்டு ரூ.2.50 லட்சம் திருட்டு

செங்கம்:செங்கம் அருகே, நகை அடகு கடையில், சுவரை துளையிட்டு, 2.50 லட்சம் ரூபாயை திருடிச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பெரியகோளப்பாடி கிராமத்தில், வெங்கடேசன், 45, முருகன், 43, ஆகியோர் சேர்ந்து, 2017 முதல், 'தீபம் திருப்பதி' என்ற பெயரில், நகை அடகு கடை நடத்தி வருகின்றனர்.சுற்றுவட்டார கிராம மக்கள், இங்கு, நகைகளை அடகு வைத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, ஐந்து பேர், அடகு கடையின் பின்புறம், சுவரில் துளையிட்டு, கடைக்கு உள்ளே சென்று, கல்லா பெட்டியில் இருந்த, 2.50 லட்சம் ரூபாயை திருடியுள்ளனர்; அங்கிருந்த, நகை லாக்கரை உடைக்க முயன்றனர்.சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர், வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்து, அடகு கடையில் இருந்த திருடர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள், அவர்கள் தப்பியோடினர்.எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, தாலுகா போலீசார், விசாரித்தனர். கடையிலிருந்த லாக்கரை உடைக்க முடியாததால், அதிலிருந்த, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின. கொள்ளையர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X