தனிப்பட்ட லாபத்துக்காக கட்சியை பலிகொடுத்தார்: சித்தராமையா மீது காங்கிரசார் புகார்

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 26, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தனிப்பட்ட லாபத்துக்காக காங்கிரசுக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது. கட்சியில் தனி நபருக்கு அடங்கி போவது அதிகரிக்கிறது. இதற்கு கடிவாளம் போடுமாறு மூத்த காங்கிரசார் மேலிடத்திடம் குமுறியுள்ளனர்.latest tamil newsகர்நாடக அரசியலில் சில நாட்களாக காங்கிரசின் சித்தராமையாவை குறிவைத்து ம.ஜ.த. தலைவர்கள் விமர்சிக்கின்றனர். இதற்கு சித்தராமையாவும் பதிலடி கொடுக்கிறார். இந்த வேளையில் அவருக்கெதிராக பரமேஸ்வர் சிவகுமார் உள்ளிட்ட மூத்த காங்கிரசார் திரும்பியுள்ளனர்; காங்கிரஸ் மேலிடத்திடம் புகார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது:

பழைய மைசூரு பகுதியில் காங்கிரசுக்கு ம.ஜ.த. முக்கியமான எதிரி. சித்தராமையா தேவகவுடா குடும்பத்துக்கு இடையே தனிப்பட்ட முறையில் பகை உள்ளது. சட்டசபை தேர்தலின்போது சித்தராமையா தேவையின்றி தேவகவுடா குடும்பத்தினரை விமர்சித்ததால் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது.கூட்டணி அரசு அமைந்தபோதும் சித்தராமையா ம.ஜ.த. தலைவர்களை குறிவைத்து அரசியல் செய்து வந்தார். கூட்டணி அரசு கவிழும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்தார்.

ம.ஜ.த. மாநில தலைவராக இருந்த விஸ்வநாத்தை கடுமையாக விமர்சித்ததன் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு இடையே இருந்த ஒற்றுமையை சீர்குலைத்தார்.ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை பற்றியும் தன் ஆதரவாளர்கள் நலனை பற்றியும் ஆலோசித்தாரே தவிர காங்கிரசை பலப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தவில்லை.இப்போது ம.ஜ.த. தலைவர்கள் சித்தராமையாவை குறிவைத்தே விமர்சிக்கின்றனர்.


latest tamil newsஇந்த கட்டத்தில் காங்கிரசின் சில தலைவர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக பேச முற்பட்டால் பழைய மைசூரு பகுதியில் கட்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்படும்.கூட்டணி அரசு நடத்தினோம். லோக்சபா தேர்தலையும் கூட்டணியுடன் எதிர்கொண்டோம். இப்போது திடீரென்று பரஸ்பரம் விமர்சித்துக் கொண்டால் மக்கள் மத்தியில் கட்சியின் இமேஜ் பாதிக்கப்படும்.

எனவே சித்தராமையாவின் பேச்சுக்கு கடிவாளம் போடுங்கள். அவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமர்த்துவதற்கு முன் அனைவருடனும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.கட்சி மேலிடம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது. காங்கிரசுக்கு நெருக்கடியான காலம். ஒரு நபருக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. சித்தராமையாவே செல்வாக்குமிக்க தலைவர் என்றால் 2018 தேர்தலில் ஆட்சியை இழந்திருக்க மாட்டோம்.

சட்டசபை தேர்தலில் நாம் வெற்றி பெற்றதே 80 இடங்கள் தான். காங்கிரசுக்கு சக்தி இருந்தாலும் இல்லை என்றாலும் 30 முதல் 40 சதவீத மக்கள் கட்சிக்கு ஓட்டு போடுகின்றனர்; குறைந்தபட்சம் 80 தொகுதிகளில் வெற்றி பெறும் திறமை காங்கிரசுக்கு உள்ளது.சித்தராமையா தலைமையால் கட்சிக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக அவரது தனிப்பட்ட 'இமேஜ்' அதிகரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் கூட்டமைப்பு தலைமைக்கு மேலிடம் முக்கியத்துவம் தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
26-ஆக-201916:12:12 IST Report Abuse
Baskar தவித்த வாய்க்கு தண்ணி கொடுக்காத ஒரு தலைவன் இனி தனி கிடந்தது அல்லா பட போகிறான்.
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
26-ஆக-201907:11:21 IST Report Abuse
Subburamu Krishnaswamy சித்தராமையாவின் பேச்சுக்கு கடிவாளம் போடுங்கள். அவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமர்த்துவதற்கு முன் அனைவருடனும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.கட்சி மேலிடம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது. காங்கிரசுக்கு நெருக்கடியான காலம். ஒரு நபருக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. சித்தராமையாவே செல்வாக்குமிக்க தலைவர் என்றால் 2018 தேர்தலில் ஆட்சியை இழந்திருக்க மாட்டோம். All these second line congress leaders are still slaves to Sonia family specifically to Rahul. Now they are talking about hero worship. Importance is being given to a single family (Sonia caucus) at national level. They want to be a slaves at national level and now they will not accept the leadership of a individual in Karnataka. Congress is not a democratic party. All the party cadres are being appointed and approved by Sonia family. In India many parties are run by a specific leader and his family. Even in communists siblings are being promoted to party posts. In the name of democracy party leaders are acting like Zamindars.
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
26-ஆக-201906:07:03 IST Report Abuse
Ray அவர் மட்டும்தானா>
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X