நெருப்புடன் விளையாடும் இந்தியா: பாக்., அதிபர் அலறல்

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 26, 2019 | கருத்துகள் (48)
Advertisement

இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது'' என பாகிஸ்தான் அதிபர் அரிப் அல்வி அலறியுள்ளார்.






கனடா நாட்டின் 'வைஸ் நியூஸ்' என்ற செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ள இந்திய அரசு நெருப்புடன் விளையாடுகிறது. அந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மை அந்த நெருப்பில் எரிந்து அழியும்; காஷ்மீர் கொந்தளிக்கும்.

காஷ்மீர் பிரச்னையை இத்தனை காலமாக இரு தரப்பு விவகாரம் என கூறி இந்தியா ஏமாற்றி வந்தது. அதை நாங்கள் சர்வதேச பிரச்னையாக ஆக்கி விட்டோம். எத்தனை காலத்திற்கு தான் ஏமாற்ற முடியும். இப்போது காஷ்மீர் விவகாரம் சர்வதேச அளவில் பேசப்படுகிறது.





காஷ்மீரில் பயங்கரவாதத்தை இந்தியாதான் துாண்டி விடுகிறது. அதில் பாகிஸ்தானுக்கு எந்த பங்கும் இல்லை. காஷ்மீரின் புல்வாமாவில் நடந்தது போன்ற தாக்குதலை பாகிஸ்தானில் நிகழ்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடன் போரை பாகிஸ்தான் துவக்காது. இந்தியா துவக்கினால், எங்களை பாதுகாப்பது எங்களின் உரிமையாகி விடும். இவ்வாறு அதிபர் அல்வி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-ஆக-201923:43:44 IST Report Abuse
Rajagopal காஷ்மீர்ல குளிர் காலத்துல நெருப்பு சட்டியை உள்ள வச்சிக்கிட்டுப் போவாங்கல்ல? அந்த நெருப்பை சொல்லுதாரு. அதோட வெளயாடினா, குளிர் வெறச்சிராது? அதத்தான் விளையாட்டா எடுத்துராந்தீங்கன்றாரு. அப்பால காஸ்மீரில சனங்க என்ன பண்ணுவாங்கன்னு அவருக்கு ஒரு கவல.
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
26-ஆக-201921:16:35 IST Report Abuse
r.sundaram அது என்க காஷ்மீர், எங்க நாட்டோட முற்றிலுமாக இணைத்துக்கொண்டோம். இதில் உனக்கென்ன வந்தது? காஷ்மீரில் தீ பற்றி எரியும் என்றால் அந்த தீயை அனுப்புகிறவன் நீ தானா?
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
26-ஆக-201920:52:30 IST Report Abuse
அம்பி ஐயர் நல்ல காமெடி.... இந்தியா தான் நெருப்பு.... பாக். வெறும் பஞ்சு போலத்தான்..... நெருப்புடன் பஞ்சு மோதினால் என்ன ஆகும் என்பது பாக்.கிற்கு நன்றாகவே தெரியும்..... இங்கு சுடலை புலம்பவில்லையா..... ஆச்சியைப் புடிப்போம்.... ஆச்சியப் புடிப்போம்னு..... அதே போல காஷ்மீர் கைய விட்டுப் போயிட்டதால அவுனுங்க புலம்புறானுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X