பா.ஜ.,வுக்கு வாய்ப்பு கொடுக்கும் காங்,: மாயாவதி

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 26, 2019 | கருத்துகள் (16)
Advertisement

புதுடில்லி : காஷ்மீருக்கு சென்றதன் மூலம் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு காங்., வாய்ப்பு கொடுத்துள்ளது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.






ஆக.,5 ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அசு ரத்து செய்தது. இதனையடுத்து காஷ்மீரில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து தற்போது காஷ்மீரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருந்தும் சில பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடப்பதால், பதற்றமான பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.





இந்நிலையில் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆக., 24 அன்று, காஷ்மீர் கவர்னரின் எச்சரிக்கையை மீறி அங்கு சென்றனர். அவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் காஷ்மீர் பயணம் குறித்து மாயாவதி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.





அதில், காங்.,க்கு இப்படி செய்வது புதிதல்ல. அனுமதியின்றி காஷ்மீருக்கு சென்று, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வாய்ப்பு கொடுத்து விட்டன. காஷ்மீர் கவர்னரும் இதை அரசியலாக்க பார்க்கிறார். காஷ்மீரில் நிலை சரியாக கொஞ்ச காலம் ஆகும். யதார்த்த நிலையை புரிந்து கொண்டு எதிர்க்கட்சிகள் காத்திருக்க வேண்டும். அது தான் கோர்ட்டிலும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். நீண்ட கால கோரிக்கையான 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதை அடுத்து சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசின் முடிவால் காஷ்மீர் மக்கள் நலத்திட்டங்களை பெறுவர் என பகுஜன் சமாஜ் நம்புகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
27-ஆக-201906:49:24 IST Report Abuse
அம்பி ஐயர் நீங்க சொல்றதை அப்படியே கொஞ்சம் சுடலைக்கும் எடுத்துச் சொல்லுங்க....
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
26-ஆக-201917:05:27 IST Report Abuse
Gopi பெஹன்ஜி உங்களுக்கு இருக்கும் சமூக நீதி பற்றிய அறிவு கூட இங்கிருக்கும் பகுத்தறிவ பாசறை கோஷ்டிக்கு இல்லையே
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
26-ஆக-201916:04:52 IST Report Abuse
krishna என்னம்மா மாயாவதி என்ன ஆச்சு உங்களுக்கு.நாட்டுக்கு நல்ல விஷயங்களை பத்தி பேச ஆரம்பிச்சுட்டீங்க. பாராளுமன்ற எலெக்ஷன்ல மோடிகிட்ட வாங்கின மரண அடி நல்ல்லவங்கள உங்கள maathiducha
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X