சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 26, 2019 | கருத்துகள் (77)
Advertisement

புதுடில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.






மனு தள்ளுபடி :


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன் சிபிஐ அதிகாரிகளால் ஆக., 21 அன்று சிதம்பரம் கைது செய்யப்பட்டார். டில்லி கோர்ட், சிதம்பரத்திற்கு வழங்கிய 5 நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிய உள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.





இந்த மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி, சிதம்பரம் ஆக.,21 அன்று கைது செய்யப்பட்டு விட்டதால், முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு காலாவதியாகி விட்டது தானே என கேள்வி எழுப்பினார். மேலும், முன்ஜாமின் பெற முறைப்படி கோர்ட்டை அணுகும்படி நீதிபதி அறிவுறுத்தியதுடன், முன்ஜாமின் கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.




சிபிஐ கிடுக்குப்பிடி :
சிபிஐ காவல் முடிந்ததை அடுத்து, சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க சிபிஐ முயற்சித்து வருகிறது. விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் சிதம்பரத்தின் சிபிஐ காவலை நீட்டித்து, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஆக-201912:08:16 IST Report Abuse
Sridhar இந்திராணி முகர்ஜியின் அபிடேவிட்டை ஏன் முழுமையாக வெளியிட தயங்குகிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Aruna -  ( Posted via: Dinamalar Android App )
27-ஆக-201910:21:27 IST Report Abuse
Aruna இதற்கு பலமுறை முன்பே தள்ளு படி ஆகியிருக்க வேண்டிய முன்ஜாமீன். Better late then never .
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
27-ஆக-201907:38:39 IST Report Abuse
Darmavan ஹை கோர்ட் ஜட்ஜ் இவனை கிங் பின் என்று சொன்னதில் தவறு இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X