சேவலை வைத்து கல்லா கட்டும் அதிகாரி... தாவலினால், அஞ்சி நடுங்கும் மாஜி மந்திரி! | Dinamalar

சேவலை வைத்து 'கல்லா' கட்டும் அதிகாரி... தாவலினால், அஞ்சி நடுங்கும் 'மாஜி' மந்திரி!

Updated : ஆக 27, 2019 | Added : ஆக 27, 2019
Share
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் என விளையாட்டுகளை பார்க்க சித்ராவும், மித்ராவும், வீரராகவ பெருமாள் கோவில் நோக்கி புறப்பட்டனர்.வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், இருவரும் உற்சாகம் பொங்க, வண்டியில் பறந்தனர்.'அந்த அதிகாரி 'தலையீடு அதிகமாக இருக்கறதால, பி.டி.ஓ.,கள் ரொம்ப கண்ணீர் வடிக்கறாங்க, '' ஆரம்பித்தாள் மி்த்ரா.''ஏன்.. என்னாச்சு
 சேவலை வைத்து 'கல்லா' கட்டும் அதிகாரி... தாவலினால், அஞ்சி நடுங்கும் 'மாஜி' மந்திரி!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் என விளையாட்டுகளை பார்க்க சித்ராவும், மித்ராவும், வீரராகவ பெருமாள் கோவில் நோக்கி புறப்பட்டனர்.வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், இருவரும் உற்சாகம் பொங்க, வண்டியில் பறந்தனர்.'அந்த அதிகாரி 'தலையீடு அதிகமாக இருக்கறதால, பி.டி.ஓ.,கள் ரொம்ப கண்ணீர் வடிக்கறாங்க, '' ஆரம்பித்தாள் மி்த்ரா.''ஏன்.. என்னாச்சு மித்து?''''ஊராட்சியில், சைட்டுக்கு அப்ரூவல் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுதாம்.
சதுரடி கணக்குல கட்டணம் மட்டுமல்ல, 'கவனிச்சா'தான் கிடைக்குதாம். அதிலும், மாவட்ட அதிகாரி ஒருத்தர் தலையிட்டு, அதையும் 'கறந்துட்டு' போயிடறாராம்,''''ஆமா... வல்லவனுக்கு வல்லவன்தான். அதுசரி... அப்ரூவல் கொடுக்கறது எப்படி அதிகாரிக்கு தெரியுது,'''கவர்மென்ட் அக்கவுன்ட்டில், அப்ரூவல் கட்டணம் 'கிரெடிட்' ஆனதும், மாவட்ட அதிகாரி, கம்ப்யூட்டர்ல பார்த்திடறாரு. அடுத்த நாளே, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கே போயி மிரட்டி, பஞ்சாயத்து செக்ரட்டரியை கூப்பிட்டு, பணத்தை வாங்கிட்டு போறாராம்,''
''இத்தனைக்கும் அந்த அதிகாரிக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையாம். இருந்தாலும், அவரு இப்படி நடந்துக்கறதால, பி.டி.ஓ., கள் கையை பிசையறாங்களாம்,''அப்போது, 'பாலசுப்ரமணியம்' பூஜா ஸ்டோர்ஸ் வரவே, சித்ரா வண்டியை நிறுத்தி, பொருட்களை வாங்கி கொண்டு, மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்தாள். ரோட்டில், வட மாநில தொழிலாளர்கள் இந்தியில் ஆவேசமாக பேசி சென்றனர்.
அதைப்பார்த்த, மித்ரா, ''இந்தியில் இவங்க பேசறத கேட்டதும், ஜல் சக்தி அபியான் குழு நினைவுக்கு வந்திடுச்சு,''என்றார்.''ஆமாண்டி மித்து. சொல்ல மறந்துட்டேன். ஜல் சக்தி அபியான் குழு மத்திய அரசு 'டீம்' என்பதால், தமிழ் தெரியாது. அதனால, இங்கிலீஷ் தெரிந்த அதிகாரிய ஒருத்தர கூட அனுப்பறாங்க. அவரு சொல்றததுதான், குழுவுக்கு வேத வாக்கு. இதனால, வேலை நடக்கற பக்கம் கூட்டிட்டு போய், ஒரு வழியா சமாளிக்கிறாங்க,''''இந்தி படிக்காததோட அருமை இப்பதான், அதிகாரிகளுக்கு தெரிய ஆரம்பிக்குது.
அக்கா... இந்த கருவூலத்தில், 'கையை நனைக்கிலீன்னா' வேலை நடக்கிறதில்லையாம்,'' மித்ரா புதிராக பேசினாள்.''மித்து, கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லேடி,''''கவர்மென்ட் ஆபீஸ் சம்பந்தமான எந்த வேலையா இருந்தாலும், கருவூலத்துல சீக்கிரமா செஞ்சு கொடுக்கறதே இல்லையாம். குறிப்பாக, ரிடயர்மென்ட் ஆனவங்களிடம், 'கறந்துட்டுத்தான்' காரியம் பண்றாங்களாம்.
ஏன்... இப்படி பண்றாங்கன்னு, தாசில்தார்களே புலம்பறாங்களாம்,''''ஆமாண்டி... மக்கள்கிட்ட இவங்க மட்டும் ஒழுங்கா நடந்துக்கிறாங்களா? அங்க வாங்கறாங்க.. இங்க கொடுக்கிறாங்க... எல்லோரும் சரியாக இருந்தால் மட்டுமே, எல்லாம் நல்லாருக்கும். இல்லையா மித்து,''''வாஸ்தவம்தான் அக்கா... நாம போன வாரம் பேசின மாதிரி, தினகரன் கூடாரம் காலியாயிடுச்சு போல...''
''ஆமாண்டி மித்து. நானும் கேள்விப்பட்டேன். 'சிவ'மான சாமி, மீண்டும், ஆளுங்கட்சிக்கு போயிட்டாராம். இன்னொரு 'மாஜி'க்கும் வலை விரிச்சிருக்காங்களாம். எப்படியும் அவரையும் இழுத்திடுவாங்களாம்,''''பழைய ஆள் மறுபடியும் கட்சிக்குள் வந்ததில், 'மாஜி'க்கு 'ஆனந்தமே'இல்லையாம். ஏற்கனவே, 'சவுத்'தும், 'நார்த்'தும் குடைச்சல் கொடுக்கற சூழலில், இவரு வேற வந்திட்டா, எப்பிட சமாளிக்கிறதுன்னு, புலம்பறாராம்,'' என்றாள் மித்ரா.
''அங்கே கோஷ்டிகானம் ஒலிக்குதுன்னா... எம்.பி.,யை எதுக்குமே கூப்பிறதில்லைன்னுட்டு, தோழர்கள் கொதிச்சு போயிருக்காங்களாம்,''''ஏங்க்கா... என்னாச்சு?'''''ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணி துவக்க விழாவுக்கு, கார்ப்ரேஷன் சார்பில், எம்.பி., க்கு அழைப்பே இல்லையாம். இப்படியே போனா, போராட்டம் நடத்துவோம்னு, தோழர்கள் பகிரங்கமா எச்சரிக்கை விடுத்திருங்காங்களாம்,''
''அவரு வேற கட்சியாக இருந்தாலும், எம்.பி.,தானே. கண்டிப்பா கூப்பிட்டிருக்கணும்,'' என்ற சித்ரா, கோவில் முன்னுள்ள பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி, டோக்கன் வாங்கினாள்.சுவாமி தரிசனம் செய்து விட்டு, இருவரும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி மைதானத்தில், உட்கார்ந்து கொண்டனர்.
''மித்து, சூரிய கட்சி கொடி கட்டிய காரில், போதை புகையிலை, கர்நாடக சரக்கு வைச்சு விற்றது தொடர்பா, ரெண்டு பேரை, அரெஸ்ட் செய்து விசாரிச்சாங்க தெரியுமா?''''ஆமாங்க்கா.... அதில் என்னாச்சுங்க?'''''பார்'களில் குறைஞ்ச விலைக்கு விற்க, கர்நாடக சரக்குகளை சப்ளை செய்வது இவர்கள் என்பது தெரிஞ்சுது,''''இதை தெரிஞ்சுகிட்ட ஆளுங்கட்சியினர், 'சிட்டிக்குள் சரக்கு, லாட்டரி, புகையிலை பாக்கெட் விற்பனை எல்லாம் சூரிய கட்சியினர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நாம ஆளுங்கட்சியா இருந்தும், என்ன பிரயோஜமுன்னு, புலம்பி தள்ளறாங்களாம்,
''அதற்குள் மேளதாள சகிதம் சுவாமி புறப்பாடு நடந்தது. இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறத்துவங்கினர். வழுக்கி விழவே, மீண்டும் மீண்டும் முயற்சித்தனர். ஒரு வழியாக உச்சிக்கு சென்றார் ஒருவர். கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.பிரசாதம் வாங்கி கொண்டு, இருவரும் புறப்பட்டனர். அப்போது, பக்தர்கள் கூட்டத்தை ஊர்க்காவல் படையினர், ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தனர்.அவர்களை பார்த்த, மித்ரா, ''அக்கா... இந்த ஹோம்கார்டு அதிகாரி மீது, கமிஷனர் ஆபீசில், பெண்கள் புகார் கொடுத்த விஷயம் தெரியுமா,'' என்றாள்.''என்னட சொல்றே. 'ஷாக்'கான விஷயத்தை, ரொம்ப லேட்டா சொல்றே,''''சாரிங்க்கா... மாநகர ஊர்க்காவல் படைக்குள் நடக்கும் குளறுபடிகள் தெரியாம, அவர் பார்த்துக்கிறாராம். பனியன் கம்பெனி வெச்சுகிட்டு, ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களுடன் கைகோர்த்துட்டு, மறுபடியும் பதவியை புடிச்சிட்டாரு,''''இதனால, ரொம்ப தெனாவட்டா நடந்துக்கிறாராம். டியூட்டி முடிவு செய்வதில், ரொம்ப கெடுபிடி செய்வதால், நாலு லேடீஸ், அவர் மீது கமிஷனர் ஆபீசில் கம்ளைன்ட் கொடுத்திட்டாங்களாம். ஆனாலும், இது விஷயம், வெளியே கசியாமல், 'கப்சிப்'ன்னு அடக்கி வாசிக்கிறாங்கன்னா பாத்துக்கோங்க...''என்று விளக்கினாள் சித்ரா.சிக்னலில் வண்டியை நிறுத்திய சித்ரா, மையத்தடுப்பில் ஒட்டப்பட்டிருந்த 'பிரபு' சினிமா பட போஸ்டரை படித்தாள்.
அதற்குள், பச்சை விளக்கு ஒளிரவே, மீண்டும் வண்டியை முறுக்கினாள்.அப்போது, மொபைல் போன், சேவல் போல கூவியது. பேசி விட்டு அணைத்து மீண்டும், பைக்குள் வைத்த மித்ரா, ''அக்கா.... சேவலை கூவ வச்சு, சின்ன அதிகாரி ஒருவர் கல்லா கட்டறாராம்,''என்றாள்.''எங்கடி சேவல் கூவுது,''''புதுசா ஆரம்பிச்ச ஸ்டேஷனில் பணியாற்றும் சின்ன அதிகாரியோட வேலைதாங்க்கா இது. இதுக்காக, மூணு பேரை நியமிச்சு, வசூலில் பட்டைய கிளப்புறாராம். சில நேரங்களில், சேவல் சண்டையை நடத்த சொல்லறது,
அப்புறம் போய் புடுச்சு உள்ள போடறதே இவருக்கு வேலையாம்,''''இப்படி செஞ்சு, மாசாமாசம், 'லகர'ங்களில், போட்டு தாக்குகிறாராம். 'சின்ன வயசுதான் ஆகுது. இன்னும் பெரிய லெவலுக்கு வரலாம். அதுக்குள்ள இந்த சின்னசின்னதா பண்ணாட்டி என்ன?' என, பலரும் சொன்னாலும், காதில் போட்டு கொள்வதில்லையாம்.''சரி... விடு மித்து. தலை எழுத்தை யாராலும் மாற்ற முடியாது,''என்ற சொன்ன சித்ரா, தனது மொபைல் போன் ஒலிக்கவே, வண்டியை ஓரங்கட்டினாள்.''சொல்லு, கார்த்திக். இதோ.. வந்துட்டே இருக்கேன்,'' என்று பேசி வண்டியை ஓட்டினாள்.
''யாருக்கா, போனில்?''''எங்க 'கசின்' வந்திருக்கான்,'' என்ற சித்ரா, ''திருட்டு விஷயமா 'கம்ளைன்ட்' கொடுக்க போனா, புதுசா ரூல்ஸ் போடறாங்களாம் போலீஸ்காரங்க,'' என, புதிராக பேசினாள்.''எந்த ஸ்டேஷனில்?''''மித்து, போயம்பாளையத்தில் சமீபத்தில், ஒரு கடையில், நுழைந்து மொபைல், பணத்தை திருடிட்டு போயிட்டாங்க. இதுசம்பந்தமாக, 'பாத்திர' ஸ்டேஷனில், புகார் கொடுத்ததற்கு, எப்.ஐ.ஆர்., போட மறுத்துட்டாங்க,''''காரணம் கேட்டா, உங்க கடைக்கு வந்துட்டு, போறவங்க அனைவரையும் கூட்டிட்டு வாங்க. விசாரிச்சிட்டு, அப்புறமா, எப்.ஐ.ஆர்., போடறம்னு சொல்லிருக்காங்க,''''போலீஸ் உங்கள் நண்பன்', அப்படின்னு, கொட்டை எழுத்தில் எழுதி வைச்சா போதுங்களா? மக்களுக்கு உதவி செய்யத்தானே இருக்கிறோங்கறதையே மறந்துடறாங்க்கா...'
'''சரியா சொன்னாய்... இதே மாதிரி, பல்லடத்தில் ஒரு அதிகாரி, விவசாயிகளை பேசி, வசமா மாட்டிட்டாராம்?''''ஆமாங்க்கா. கேள்விப்பட்டேன். இ.பி., டவர் அமைக்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிச்சப்ப, இவரு போய், 'உங்களுக்கு இலவசம் மின்சாரம் எதுக்கு வேணும்' என, ஏடகூடமா பேச, அவரை, விவசாயிகள், 'ரவுண்ட்' கட்டி சரமாரியா கேள்வி கேட்டாங்களாம்,'' ''அதோடில்லாமல், அடுத்த நாள், எல்லா கட்சிக்காரரையும் கூப்பிட்டு, கூட்டம் நடத்தி, அவர் மேல கண்டன தீர்மானமும் போட்டாங்களாம்,''
''அவரு அடிக்கடி, இதேமாதிரி சர்ச்சையில் சிக்கிக்கிறார். மேலதிகாரி அவருக்கு 'அட்வைஸ்' செஞ்சா பரவாயில்லைன்னு, கூட இருக்கிறவங்களே சொல்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.அதற்குள், மித்ரா வீடு வரவே, அவளை இறக்கி விட்டு, ''ஓ.கே., பை மித்து. வர்றேன்,'' என்று சொல்லி, வண்டியில் பறந்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X