தரம்தாழ்ந்த அரசியல்; ராகுலை சாடும் காஷ்மீர் கவர்னர்

Updated : ஆக 27, 2019 | Added : ஆக 27, 2019 | கருத்துகள் (61)
Share
Advertisement
ஜம்மு: காஷ்மீருக்கு வருமாறு நான் விடுத்த அழைப்பை வைத்து, ராகுல் தரம்தாழ்ந்த அரசியல் செய்வதாக காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் கூறினார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஷ்மீர் குறித்து கூறிவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரை காஷ்மீருக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் எனது அழைப்பை வைத்து அவர் அரசியல்

ஜம்மு: காஷ்மீருக்கு வருமாறு நான் விடுத்த அழைப்பை வைத்து, ராகுல் தரம்தாழ்ந்த அரசியல் செய்வதாக காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் கூறினார்.



latest tamil news



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஷ்மீர் குறித்து கூறிவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரை காஷ்மீருக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் எனது அழைப்பை வைத்து அவர் அரசியல் செய்கிறார். காஷ்மீருக்கு எதிர்கட்சி தலைவர்களுடன் வந்து, கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும், ஊடகங்களில் உரையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரது அரசியலை புரிந்து கொண்டதையடுத்து, அவருக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றேன்.


latest tamil news



latest tamil news



காஷ்மீரில் அனுமதிக்கப்படாததையடுத்து டில்லி திரும்பிய ராகுல், காஷ்மீர் தொடர்பான பொய் தகவல்களை தெரிவித்தார். ராகுல் கூறும் அக்கருத்துக்களை இந்தியாவுக்கு எதிராக பாக்., பயன்படுத்தக்கூடும். முக்கிய விவகாரங்களில் தேச நலனை முதன்மையாக கொள்ள வேண்டும். அதனை தரம்தாழ்ந்த அரசியல் லாபங்களுக்காக ராகுல் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஆக-201904:08:52 IST Report Abuse
J.V. Iyer நல்ல அரசியல் செய்து புகழ் பெறுவது எதிர்க்கட்சிகளுக்கு, தேசிய குடும்ப, முன்னேற்ற கழக கட்சிகளுக்கு கடினம். தெரியவும் தெரியாது. தரம் தாழ்ந்த அரசியலில் அவர்களை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. அப்படியே வளர்ந்தவர்கள்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
27-ஆக-201921:29:06 IST Report Abuse
Rasheel கூடவே பாக்கிஸ்தான் ஆதரித்த தமிழ் நாட்டு கட்சியும் இருக்கே? இவங்க ஜன பண நாயகம் உலகித்திற்கே தெரியுமே
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
27-ஆக-201919:09:40 IST Report Abuse
spr Chowkidar NandaIndia - சொன்ன கருத்து சரியானதே இது நாள்வரை பாகிஸ்தான் ஆதரவுடன் தாங்கள் அனுபவித்த உரிமை ஒரே நாளில் பறிக்கப்பட்டால் தீவிரவாதிகள் கொதித்தெழுவது இயல்பே ஆனால் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம் அரசியல்வியாதிகள் பாஜகவை எதிர்ப்பதாக நினைத்து நம் நாட்டை அந்நிய சக்திகளிடம் காட்டக் கொடுக்கிறார்கள் இவர்கள் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் அன்று முதல் இன்றுவரை தங்கள் தனிப்பட்ட பகைமை காரணமாகவே மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டு, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து நம் நாட்டை அந்நியர் வசம் ஒப்படைத்த அந்த நிலை இன்னமும் தொடர்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X