பிரமாண்ட பிரசாரம்; தயாராகிறது பா.ஜ.,

Added : ஆக 27, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதன் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு விளக்க, நாடு தழுவிய அளவில், பிரமாண்ட பிரசாரம் மேற்கொள்ள, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், சட்டசபையுடன் கூடிய

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதன் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு விளக்க, நாடு தழுவிய அளவில், பிரமாண்ட பிரசாரம் மேற்கொள்ள, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.



latest tamil news



ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக், சட்டசபையில்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன. காஷ்மீரில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கூறி, எதிர்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் முக்கியத்துவம் குறித்து, நாடு முழுவதும், 35 பெரு நகரங்கள், 370 சிறு நகரங்களில், பிரமாண்ட பிரசாரம் மேற்கொள்ள பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கஜேந்திரசிங் செகாவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது: அடுத்த மாதம்(செப்.,) முழுவதும் நடைபெற உள்ள இப்பொதுக்கூட்டங்களில், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., எம்.பி.,க்கள், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


latest tamil news



பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரிலுள்ள மக்களின் ஆதரவை திரட்ட ஸ்ரீநகர், அனந்த்நாக், பாரமுல்லா உள்ளிட்ட 9 இடங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து வரலாற்று சிறப்பு மிக்க இந்நடவடிக்கையை எடுத்ததன் மூலம், மத்திய அரசின் 85க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்கள், அங்குள்ள மக்களுக்கு முழுமையாக சென்றடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
27-ஆக-201920:27:13 IST Report Abuse
Sampath Kumar அட அட ஓகே ஓகே உங்க கூட்டத்துக்கு தமிழ் நாட்டில் எத்தனை பேரு வரு வாங்க ?? உண்மை சொன்னால் கோபம் வரும்
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-ஆக-201907:46:40 IST Report Abuse
Cheran Perumalதமிழனைத்தான் ஒன்றுக்கும் உதவாக்கரை என்று செய்து வைத்திருக்கிறீர்களே...
Rate this:
Cancel
Gopi - Chennai,இந்தியா
27-ஆக-201918:00:53 IST Report Abuse
Gopi இதை காஷ்மீரிலேயே ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு போய் சேர்த்தால் அவர்கள் திருந்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவார்கள்.
Rate this:
Cancel
Adhithyan - chennai,இந்தியா
27-ஆக-201917:58:00 IST Report Abuse
Adhithyan வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ......அங்கே கொண்டாட்டம் ...
Rate this:
tamilvaandu - Sivakasi,இந்தியா
27-ஆக-201921:14:22 IST Report Abuse
tamilvaanduசாப்பாட்டுக்கு வழியில்லாதவன் சாப்பாடு கிடைத்தால் சந்தோசம் , அடிமைக்கு விடுதலை கிடைத்தால் சந்தோசம் , கஷ்டப்பட்டு வேலைக்காக தயார் செய்து வேலை கிடைத்தால் சந்தோசம் , வேலை இருந்து வெட்டியா இருந்து வேலை போய்ட்டா அவனுக்கு கஷ்டம் தான் ஆனா மத்தவங்களுக்கு சந்தோசம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X