பிரமாண்ட பிரசாரம்; தயாராகிறது பா.ஜ.,| Dinamalar

பிரமாண்ட பிரசாரம்; தயாராகிறது பா.ஜ.,

Added : ஆக 27, 2019 | கருத்துகள் (38)
Share
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதன் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு விளக்க, நாடு தழுவிய அளவில், பிரமாண்ட பிரசாரம் மேற்கொள்ள, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், சட்டசபையுடன் கூடிய

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதன் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு விளக்க, நாடு தழுவிய அளவில், பிரமாண்ட பிரசாரம் மேற்கொள்ள, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.



latest tamil news



ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக், சட்டசபையில்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன. காஷ்மீரில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கூறி, எதிர்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் முக்கியத்துவம் குறித்து, நாடு முழுவதும், 35 பெரு நகரங்கள், 370 சிறு நகரங்களில், பிரமாண்ட பிரசாரம் மேற்கொள்ள பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கஜேந்திரசிங் செகாவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது: அடுத்த மாதம்(செப்.,) முழுவதும் நடைபெற உள்ள இப்பொதுக்கூட்டங்களில், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., எம்.பி.,க்கள், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


latest tamil news



பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரிலுள்ள மக்களின் ஆதரவை திரட்ட ஸ்ரீநகர், அனந்த்நாக், பாரமுல்லா உள்ளிட்ட 9 இடங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து வரலாற்று சிறப்பு மிக்க இந்நடவடிக்கையை எடுத்ததன் மூலம், மத்திய அரசின் 85க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்கள், அங்குள்ள மக்களுக்கு முழுமையாக சென்றடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X