புதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அவருக்கு 'நார்கோ டெஸ்ட் ' (உண்மை கண்டறியும் சோதனை ) நடத்த வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் மேலும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் என்ன கேள்வி கேட்டாலும் அவர் யெஸ், நோ என்ற ஒரு பதிலை மட்டுமே மாறி, மாறி கூறி வருகிறார். இதனால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கோர்ட்டில் சிபிஐ கூறியுள்ளது. இதனால் அவரது சிபிஐ காவல் மேலும் 5நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
'நார்கோ டெஸ்ட் ' என்றால் என்ன ?
அதாவது Sodium Pentothal or Sodium Amytal என்ற மருந்தை ஊசி மூலம் ஒருவர் உடலில் செலுத்த வேண்டும். அதன் பின்னர் அந்த நபர் அரை மயக்க நிலைக்கு தள்ளப்படுவார். அந்நேரத்தில் அவரிடம் கேட்கும் கேள்விக்கு அவரால் எந்தவொரு பொய்யும் சொல்ல மாட்டார். மேலும் அவருக்கு தெரிந்த விஷயத்தை அப்படியே வெளியே சொல்லி விடுவார். இது தான் 'நார்கோ டெஸ்ட் ' ஆகும். ஆக விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான விவரங்கள் கிடைத்து விடும்.

இந்நிலையில் பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி அவரது டுவிட்டரில்: சிபிஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்றால் அவருக்கு நார்கோ டெஸ்ட் எடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
I think that if CBI continues to get stonewalled by PC in its interrogation then CBI should ask for PC's narco test
— Subramanian Swamy (@Swamy39) August 27, 2019
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE