பொது செய்தி

இந்தியா

ராமர் பாலம் பற்றி ஆய்வு; மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (23)
Share
Advertisement

காரக்பூர் : '' ராமர் பாலம் போன்ற, இந்தியாவின் பாரம்பரிய கலாச்சார சின்னங்கள் பற்றி, இளம் பொறியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கூறினார்.



latest tamil news



மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.,யில், 65வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க் பேசியதாவது: ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரை, உலகின் குருவாக, பாரத நாடு இருந்துள்ளது. உலகின் முதல் மொழி என்றால், அது சமஸ்கிருதம் தான்.


latest tamil news



பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கடலில் நாம் பாலம் கட்டியுள்ளோம். அது தான் ராமர் பாலம். இன்றும் அது உள்ளது. இது போன்ற பல கலாச்சார பாரம்பரிய சின்னங்கள், நம் நாட்டில் உள்ளன. இது பற்றியும், அதை எப்படி கட்டினர் என்பது பற்றியும், இளம் பொறியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், நமது முன்னோரின் பெருமை, திறமை, அறிவு நமக்கு தெரிய வரும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
28-ஆக-201920:58:11 IST Report Abuse
Nallavan Nallavan இந்த அமைச்சர் ஆராயணும் -ன்னு மட்டும்தான் சொல்லியிருக்காரு ..... அதுக்கே மிஷனரிகள், பச்சைங்க அழுது பொலம்புதுங்க ...... ஆராய்ஞ்சு நிரூபிச்சுட்டா கடல்ல போயி நிரந்தரமா முங்கிடுவானுங்க ......
Rate this:
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
28-ஆக-201912:49:34 IST Report Abuse
Kumar periyaar அவர் பாலம் காட்டினார் என்று சொல்கிறார்கள், எவ்ளோ பெரிய எஞ்சினீரா இருந்து இருப்பர், எந்த கலோரியை படிதாரோ அவர் தெரியவில்லை
Rate this:
தா்மசிந்தனை - chennai,இந்தியா
28-ஆக-201913:55:19 IST Report Abuse
தா்மசிந்தனைராஜராஜ சோழன் எந்த கல்லூரியில் படித்து தஞ்சை பெரிய கோவில் கட்டினார் பல்லவர்கள் எந்த கல்லூரியில் படித்து குடைவரை கோவில்களை கட்டினார்கள் மொகலாயர்கள் எந்த கல்லூரியில் படித்து மசூதிகள் கட்டினார்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல கோவில்கள் இன்னும் நம் தமிழ்நாட்டில் இருக்கிறது அதை எல்லாம் எப்படி கட்டினார்கள்...
Rate this:
Kumar periyaar - Chennai,இந்தியா
28-ஆக-201916:00:13 IST Report Abuse
Kumar periyaarநீங்கள் சொல்வதெல்லாம் குறிப்பிட்ட காலங்கள் முன்னாடி நடந்தது, உலகம் தோன்றிய காலத்தில் வாழ்ந்தார் என்று சொல்கிறார்கள் ராமர், உலகம் தோன்றி பல டிரில்லியன் வருடங்கள் போனதாக ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் ராமர் பெரிய தில்லாலங்கடியாக இருந்து இருப்பர், கடவுளின் பெயரால் யாரை ஏமாத்துகிறார்கள்....
Rate this:
தா்மசிந்தனை - chennai,இந்தியா
28-ஆக-201919:21:30 IST Report Abuse
தா்மசிந்தனை// குறிப்பிட்ட காலங்கள் முன்னாடி நடந்தது// அந்த குறிப்பிட்ட காலங்கள் எந்த கல்லூரி இருந்தது அப்போது யார் இவர்களுக்கு கட்டுவதற்கு சொல்லி கொடுத்தார்கள் அது பற்றி கேட்க தெரிய வில்லையா...
Rate this:
Cancel
Dv Nanru - mumbai,இந்தியா
28-ஆக-201910:41:29 IST Report Abuse
Dv Nanru உலகில் மிக பழமையான மொழி தமிழ் மொழி இதில் எங்கிருந்து வந்தது சம்ஸ்கிருதம் எப்பொழுது முதல் பேசப்படுகிறது என்கிற தகவல்கள் எல்லாம் நிரூபித்த பிறகு இந்த அமைச்சர் எப்படி பேசுகிறார் ...???
Rate this:
28-ஆக-201913:11:25 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்அவர் மொழியை பற்றி சொல்லவில்லை , கட்டிட கலைகளை பற்றி சொல்லுகிறார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X