அரியலூரில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரியலூரில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை

Added : ஆக 28, 2019

தஞ்சாவூர் : அரியலுார் அருகே கி.பி. 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலையை வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளனர்.தஞ்சை தமிழ் பல்கலையில் உதவி பதிவாளராகபணியாற்றி ஓய்வுபெற்றவர் ஜம்புலிங்கம். இவர் 'சோழ நாட்டில் பவுத்தம்' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.அதன் அடிப்படையில்ஜம்புலிங்கம், ஆய்வாளர்கள் செல்வபாண்டியன், ரவிக்குமார் ஆகியோருடன் அரியலுார் உடையார்பாளையம் அருகே பிள்ளைபாளையம் கிராமத்தில் மேற்கொண்ட களப்பணியில் புத்தர் சிலையை கண்டுபிடித்துள்ளனர்.இதுகுறித்து ஐம்புலிங்கம் கூறியதாவது:இடுப்புப்பகுதி வரை மட்டுமே உள்ள 97 செ.மீ. உயரமுள்ள இச்சிலையை 15 ஆண்டுகளுக்கு முன் பாண்டியன் ஏரிக்கு கரை கட்டும்போது கண்டதாகவும் அதை வழிபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.இதன் அமைப்பை பார்க்கும்போது கி.பி. 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிலை என தெரிகிறது. சோழ நாட்டில் பவுத்தம் தழைத்து வளர்ந்திருந்ததை உணர்த்தும் சான்றாக இந்த புத்தர் சிலை உள்ளது.கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் களப்பணியின் போது அரியலுார் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் தியான கோலத்தில் உள்ள புத்தர் சிலைகளைக் காண முடிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X