முத்தலாக்: உ.பி.,யில் 216 வழக்குகள் பதிவு

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
லக்னோ: முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, உத்தர பிரதேசத்தில், ஏராளமான முஸ்லிம் பெண்கள், தலாக் கூறிய, தங்கள் கணவர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக, 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பாதுகாப்பு:முஸ்லிம்களில், மூன்று முறை தலாக் கூறி, தங்கள் மனைவியை, கணவர்கள் விவாகரத்து செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

லக்னோ: முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, உத்தர பிரதேசத்தில், ஏராளமான முஸ்லிம் பெண்கள், தலாக் கூறிய, தங்கள் கணவர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக, 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



latest tamil news




பாதுகாப்பு:


முஸ்லிம்களில், மூன்று முறை தலாக் கூறி, தங்கள் மனைவியை, கணவர்கள் விவாகரத்து செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், பெண்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, முத்தலாக் தடை சட்ட மசோதா எனப்படும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் படி, முஸ்லிம் கணவர்கள், தங்கள் மனைவியரிடம், வாய் மொழியாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது பிற வழிகளிலோ, மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்வது, தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிக பட்சம் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். இதற்கிடையே, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, உ.பி., மாநிலத்தில், கணவர்களால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள், வெளிப்படையாக புகார் அளிக்க துவங்கியுள்ளனர். உ.பி.,யில் மட்டும், இதுவரை, 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர்.


latest tamil news




வரதட்சணை:


அதிகபட்சமாக, மீரட் மாவட்டத்தில், 26, சஹாரன்பூரில், 17, ஷாம்லியில், 10 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு உ.பி.,யில் உள்ள இந்த மூன்று மாவட்டங்களில், முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இது குறித்து, போலீசார் கூறியதாவது:வரதட்சணை, சொத்து தகராறு, குடும்ப வன்முறை போன்ற விஷயங்களே, பெரும்பாலான வழக்குகளுக்கு காரணமாக உள்ளன. இதுவரை, 200க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இரண்டு அல்லது மூன்று பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். பல பெண்கள் கொடுத்த புகார்கள் குறித்து போலீசார் விரிவாக விசாரித்து வருகின்றனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேங்கை - malta,மால்டா
28-ஆக-201914:10:30 IST Report Abuse
தமிழ் வேங்கை சபரி மலை பெண்ளுக்கு அனுமதி வேண்டும் வாழ வழி வேண்டும்
Rate this:
Cancel
28-ஆக-201913:06:12 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இனி வழக்குகள் பல பாயும் , மைனர் குஞ்சு மாதிரி சுற்றி வர முடியாது.
Rate this:
abdul rajak - trichy,இந்தியா
28-ஆக-201913:58:57 IST Report Abuse
abdul rajakஉங்க சமுதாயங்களில் மினார் குஞ்சு யாரும் இல்லையா ?...
Rate this:
28-ஆக-201915:53:31 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ஒரு சிலர் இருந்தாலும் சட்டம் டின்னு கட்டிவிடும். பலபேர் இதற்காகவே மதம் மாறினார்கள் , இனி முடியாது....
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
28-ஆக-201912:05:51 IST Report Abuse
வல்வில் ஓரி உங்க பங்காளி தானே இன்னொரு குரூப்... அவிங்ககிட்ட இந்த தலாக் இருக்கிற மாதிரி தெரியலையே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X