குற்றத்தை நிரூபிக்க முடியுமா? சிதம்பரம் குடும்பத்தினர் கேள்வி| Dinamalar

குற்றத்தை நிரூபிக்க முடியுமா? சிதம்பரம் குடும்பத்தினர் கேள்வி

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (84)
Share
புதுடில்லி : சட்ட விரோதமாக பணம் சம்பாதித்ததை நிரூபிக்க முடியுமா என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, சிபிஐ.,யால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு

புதுடில்லி : சட்ட விரோதமாக பணம் சம்பாதித்ததை நிரூபிக்க முடியுமா என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.



latest tamil news



ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, சிபிஐ.,யால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (ஆக.,28) விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் சிதம்பரத்தின் கைது மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, சிதம்பரத்தின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


latest tamil news



அதில், கடந்த சில நாட்களாக மீடியாக்களில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தகவல்கள் பொய்யானவை. சிதம்பரத்தின் 50 ஆண்டு கால பொது வாழ்வில் கிடைத்த நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயன்றாலும் உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. உண்மை எது என தெரியாதவரை பொய் பிரசாரம் எதுவும் செய்ய வேண்டாம்.


latest tamil news



நிறைவான சொத்துக்கள் கொண்ட, முறையான வருமான வரி செலுத்தும் சிறிய குடும்பம் எங்களுடையது. வெளிநாடுகளில் அறிவிக்கப்படாத வங்கி கணக்குகள், கணக்கில் காட்டாத சொத்துக்கள், போலி நிறுவனங்கள் பற்றிய ஆதாரத்தை அரசால் காட்ட முடியுமா? சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை. தேவையான சொத்துக்கள் இருப்பதால் தவறான முறையில் பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி தான். உண்மை நிரூபிக்கப்படும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பல நாடுகளில் சொத்துக்கள், வங்கி கணக்குகள் இருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X