பொது செய்தி

இந்தியா

உலகின் 100 சிறந்த இடங்களில் படேல் சிலை

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement

நியூயார்க்: டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் 100 சிறந்த இடங்களின் பட்டியலில் படேலின் சிலை, மும்பையில் உள்ள சோஹோ ஹவுஸ் ஆகியன இடம்பெற்றுள்ளன.latest tamil news


2019ம் ஆண்டிற்கான உலகின் 100 சிறந்த இடங்களின் 2வது பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு குஜராத்தில் நர்மதை ஆற்றின் அருகே ஒற்றுமையின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ள 597 அடி உயர சர்தார் வல்லாபய் பட்டேலின் சிலை இடம்பெற்றுள்ளது.
உலகின் உயரமான சிலை என வர்ணிக்கப்படும் இந்த சிலை, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், முதல் துணை பிரதமருமான படேல் நினைவாக அமைக்கப்பட்டது.

1947 ம் ஆண்டு இந்தியாவின் முதல் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகளை இந்த சிலை ஈர்த்து வருவதாக டைம்ஸ் பத்திரிக்கை பாராட்டி உள்ளது. டைம்ஸ் பத்திரிக்கையின் இந்த தகவலுக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


latest tamil newsஅவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் 100 சிறந்த இடங்களில் ஒற்றுமை சிலையும் இடம்பெற்றுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 34,000 பேர் இந்த சிலையை பார்த்துச் சென்றுள்ளனர். புகழ்பெற்ற சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த சிலையம் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
29-ஆக-201903:50:26 IST Report Abuse
skv srinivasankrishnaveni வேண்டாம் சிலைகள் என்று நான் சொல்லுவேன் தேவையே இல்லீங்க வல்லப பாய் படேல் என்றால் கம்பீரம் என்று என்றும் நாம் எண்ணுவது (அவரைப்பற்றி தெரிஞ்சவாளை நாம் என்று கூறுகிறேன்) உண்மையைத்தான் நமது மோடிஜியை போலவே அவரும் தனக்கென வாழாதவர் சொத்தும் சேர்க்கலீங்க கொடியே சொத்து சேர்த்தானுக தமிழக கழகம் களின் தலைவர்கள் எல்லோரும் என்பது மக்களுக்கு தெரியும் தானே வீல்சேரிலேயே (அசெம்பிளிக்குவாராமலே )கூட சம்பளம் வாங்களே முக அவர்கள் .இப்போதும் வயசு 75 என்றால் ஒய்வு என்று பிற்கால பண்றங்களேபிஜேபி லே அதை எப்படி பாக்குறீங்க பிஜேபி அண்ட் மோடியை எதிர்க்கும் மஹாநுபாவர்களெல்லாம் நாடு நன்னாயிருக்கணும் மக்கள் நலமாயிருக்கணும் என்று நம்பும் ஒரே கட்சியே பிஜேபி தான் இதுலே சந்தேகம் வேண்டாம் படேல் சிலைக்கு ஆவும் சிலவை ப்ளீஸ் பிஜேபி அவ்ளோதொகைகளை நலிந்த சிதிலமாகிப்போன கோயில்களை சீரமைக்க உதவலாம் கரெக்டுங்க ஆனால் அந்த தொகைகள் எல்லாம் கலக்கி குடிச்சுருவானுக கழக தலைவருங்க அதுதான் என்டோன்மென்ட் லக்ஷணம் லே பாக்குறோமே ஐயா
Rate this:
Cancel
28-ஆக-201921:13:45 IST Report Abuse
surendran karuppasamy எனக்கு Patel அய்யா மீது நல்ல மரியாதை உ‌ள்ளது. ஆனால் 1000 ஆண்டு பழமையான கோவில் பல உள்ளன தமிழகத்திலே. இவை பெறாத இடத்தை சென்ற வருடம் நிறுவிய ஒரு சிலை பெற்றது நம்பும் படி இல்லை. ஏதோ விளம்பரம் போன்றது இந்த செய்தி. நம்மால் சிரிக்கத் தான் முடியும்.
Rate this:
Cancel
திராவிடன் - bombay,இந்தியா
28-ஆக-201919:09:12 IST Report Abuse
திராவிடன் இதனால் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ என்ன பயன் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X