ராகுல் பெயரை இழுத்த பாக்.,: காங்., டர்ர்ர்ர்...

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement
Pakistan, lies, Congress, Pakisthan,Rahul,Rahul Gandhi, காங்கிரஸ்,பாகிஸ்தான்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.,விற்கு பாகிஸ்தான் எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பெயரை இழுத்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் குறித்த தனது பொய் மற்றும் தவறான தகவல்களை நியாயபடுத்தவே பாகிஸ்தான் இவ்வாறு செய்துள்ளதாக காங்., கூறியுள்ளது.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் மனித உரிமை அமைச்சர் ஷிரீன் மஜரி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில், காஷ்மீரில் மக்கள் இறப்பதாக ராகுல் கூறிய குற்றச்சாட்டை குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து, இதுவரை காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி மீதும், மத்திய அரசு மீதும் குற்றம்சாட்டி வந்த ராகுல், பல விஷயங்களில் அரசின் நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த வெளிநாடோ தலையிட அதிகாரம் இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் எனக்கூறினார்.


latest tamil news


பாகிஸ்தான் கடிதம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தான் பரப்பி வரும் பொய் மற்றும் தவறான தகவல்களை நியாயபடுத்த வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே ராகுல் பெயரை இழுத்துள்ளது. ஜம்மு , காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாகிஸ்தான் எந்த சூழ்ச்சி செய்தாலும், இந்த உண்மை மாறாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித், பலுசிஸ்தான் பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்து அந்நாடு சர்வதேச நாடுகளிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.


latest tamil news


சுதந்திரத்திற்கு பின்னர், பிரிவினையின் போது, பாகிஸ்தான் வந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து அந்நாடு விளக்க வேண்டும். பலுசிஸ்தானில் ஆயிரகணக்கானோர் காணவில்லை. இது குறித்தத தகவலை, அந்நாடு மறைத்துள்ளது.
அப்பகுதியில், கடந்த 2018 ஜூலை மாதம், நடந்த பேரணியில் 128 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பகுதியில், சிறுபான்மையினருக்கு எதிராக, பாகிஸ்தான் ராணுவம் செய்த உரிமை மீறல் தொடர்பாகவும் அந்நாடு விளக்க வேண்டும்.
லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், அல் கொய்தா, தலிபான் ஆகியவை அரசியல் கட்சிகள் மற்றும் ராணுவத்தின் ஆதரவுடன் செயல்படுகின்றன. இதனால், காஷ்மீர் பொய்யான தகவலை எழுப்புவதை விட்டுவிட்டு, மேற்கண்ட விவகாரங்கள் குறித்து பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
29-ஆக-201911:46:21 IST Report Abuse
ganapati sb தேவை இல்லாமல் ராகுலின் பெயரை இழுத்து விஷம பிரச்சாரம் செய்த பாகிஸ்தானுக்கு பலுச்சிதான் குறித்து பாடம் எடுத்து சிறப்பான பதிலடி கொடுத்துள்ள காங்கிரேஷிற்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
29-ஆக-201901:05:26 IST Report Abuse
Girija வைகோ காந்த அலை இழுக்குதோ? கூடி இருந்தால் கோடி இன்பம் , உள்ளே
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
28-ஆக-201921:45:42 IST Report Abuse
Subburamu Krishnaswamy இந்தியன் நேஷனல் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் தேசிய காங்கிரஸ் கட்சியென்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . சோனியா குடும்ப அடிமைகளே இனிமேல் நீங்கள் பாகிஸ்தானுக்கு சென்று தேர்தலில் நிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X