ராகுல் தான் காங்.,ன் பிரச்னை: பா.ஜ.,

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (32)
Advertisement

புதுடில்லி : ராகுலின் முதிர்ச்சியன்மை தான் காங்.,ன் பெரிய பிரச்னையாக மாறி உள்ளது என பா.ஜ., தலைவர்கள், காங்., மற்றும் ராகுலை கடுமையாக தாக்கி டுவீட் செய்து வருகின்றனர்.





காஷ்மீர் விவகாரத்தில் காங்.,ன் நிலைப்பாட்டை விளக்கி காங்., எம்.பி., ராகுல் இன்று (ஆக.,28) காலை டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். ராகுல் கருத்து பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அதனை தாக்கி மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான முக்தர் அப்பாஸ் நக்வி பதில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், ராகுலின் முதிர்ச்சியின்மை தான் காங்.,ன் பிரச்னையாகி வருகிறது. காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்டதையும், 144 தடை பிறப்பிக்கப்பட்டதையும் கடுமையாக எதிர்த்த காங்., பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை காங்., தலைமை தற்போது புரிந்து கொண்டுள்ளது என்றார்.





நக்வியை தொடர்ந்து பா.ஜ., எம்.பி., கிரிராஜ் சிங் பதிவிட்ட டுவீட்டில், காஷ்மீர் விவகாரத்தில் ஒவ்வொரு சர்வதேச அமைப்புகளின் கதவுகளையும் தட்டிய பாக்., கடைசியாக வேறுவழியில்லாமல், ராகுல் மற்றும் காங்.,ஐ தனது ஆயுதமாக எடுத்துள்ளது.
ராகுலின் பெயரை பயன்படுத்தி ஐ.நா.,வில் பாக்., மனுத்தாக்கல் செய்துள்ளதால், ராகுல் இப்படி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். இது துப்பாக்கிச் சூட்டில் காயம்படாமல் இருக்க மருந்துக் கடையில் இருந்து பேண்ட் எய்டை (band-aid) திருடி ஒட்டிக் கொண்டது போல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
28-ஆக-201921:41:17 IST Report Abuse
Allah Daniel BJP தலைவர்கள், 'பப்பு'வை இப்படி பேசுவது தவறு...இவரு இருக்குற வரை BJP தொடர்ந்து மிக மகத்தான வெற்றி பெரும்...தொழில் ரகசியத்தை வெளியில சொல்லாதீங்க பாஸ்...
Rate this:
Share this comment
Cancel
Cheran - Kongu seemai,இந்தியா
28-ஆக-201921:26:59 IST Report Abuse
Cheran ரிசர்வ் வங்கியிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கக் கூடிய நிதியை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-ஆக-201915:50:45 IST Report Abuse
Nallavan Nallavan பப்புவின் இன்னொரு பேச்சு சர்ச்சை ஆகியிருக்கிறது ................ ட்விட்டரில் மோதியும், நிர்மலா சீதாராமனும் ரிசர்வ் வங்கியைக் கொள்ளை அடித்துவிட்டார்கள் என்றே சொல்லியிருக்கிறான் ..............
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
28-ஆக-201920:11:00 IST Report Abuse
Rajasசார், முந்தய உங்கள் comments களில் பல விஷயங்கள் இருக்கும். இப்போதெல்லாம் whatspp குரூப்பில் எழுதுவது போல் எழுதுகிறீர்கள். எப்போதுமே ஆளும் கட்சி தான் அதிகமாக விமர்ச்சிக்கப்படும். ஏன் என்றால் ஆட்சி இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது பலம் இருக்கிறது, ஏன் செய்யவில்லை என்று எல்லோரும் ஆளும் கட்சியை தான் கேட்பார்கள். எதிர்க்கட்சியை அல்ல. ஆட்சி நடத்துவது எவ்வளவு பெருமையோ அதை போல் கேள்விகளுக்கு பதில் சொல்ல தான் வேண்டும். கொள்ளை அடிப்பது, திருடுவது என்ற வார்த்தைகள் அரசியலில் வழக்கமாக சொல்லப்படுவது தான். மோடியும் காங்கிரசை அப்படி தான் சொல்லியிருக்கிறார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X