ராகுல் தான் காங்.,ன் பிரச்னை: பா.ஜ., | Dinamalar

ராகுல் தான் காங்.,ன் பிரச்னை: பா.ஜ.,

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (32)
Share

புதுடில்லி : ராகுலின் முதிர்ச்சியன்மை தான் காங்.,ன் பெரிய பிரச்னையாக மாறி உள்ளது என பா.ஜ., தலைவர்கள், காங்., மற்றும் ராகுலை கடுமையாக தாக்கி டுவீட் செய்து வருகின்றனர்.



latest tamil news


காஷ்மீர் விவகாரத்தில் காங்.,ன் நிலைப்பாட்டை விளக்கி காங்., எம்.பி., ராகுல் இன்று (ஆக.,28) காலை டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். ராகுல் கருத்து பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அதனை தாக்கி மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான முக்தர் அப்பாஸ் நக்வி பதில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், ராகுலின் முதிர்ச்சியின்மை தான் காங்.,ன் பிரச்னையாகி வருகிறது. காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்டதையும், 144 தடை பிறப்பிக்கப்பட்டதையும் கடுமையாக எதிர்த்த காங்., பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை காங்., தலைமை தற்போது புரிந்து கொண்டுள்ளது என்றார்.


latest tamil news



நக்வியை தொடர்ந்து பா.ஜ., எம்.பி., கிரிராஜ் சிங் பதிவிட்ட டுவீட்டில், காஷ்மீர் விவகாரத்தில் ஒவ்வொரு சர்வதேச அமைப்புகளின் கதவுகளையும் தட்டிய பாக்., கடைசியாக வேறுவழியில்லாமல், ராகுல் மற்றும் காங்.,ஐ தனது ஆயுதமாக எடுத்துள்ளது.
ராகுலின் பெயரை பயன்படுத்தி ஐ.நா.,வில் பாக்., மனுத்தாக்கல் செய்துள்ளதால், ராகுல் இப்படி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். இது துப்பாக்கிச் சூட்டில் காயம்படாமல் இருக்க மருந்துக் கடையில் இருந்து பேண்ட் எய்டை (band-aid) திருடி ஒட்டிக் கொண்டது போல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X