கவிஞனாக மாறிய மாணவன்: கவிதை எழுதி சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவிஞனாக மாறிய மாணவன்: கவிதை எழுதி சாதனை

Added : ஆக 28, 2019 | கருத்துகள் (2)
Share
மேலுார்: மேலுார் அ.வல்லாளபட்டியில் கூலித்தொழிலாளியின் மகன் வரதராஜன் 16, கவிதை எழுதி சாதனை படைத்து உள்ளார்.இக்கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிபாக்கியலட்சுமி மகன் வரதராஜன். அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.தமிழ் மொழியில் ஆர்வம் கொண்ட இவர், தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், ஆசிரியர் செந்தில்குமார் ஊக்குவிப்பால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று கவிஞர், கவிமாமணி,
கவிஞன், மாணவன்,  கவிதை, சாதனை

மேலுார்: மேலுார் அ.வல்லாளபட்டியில் கூலித்தொழிலாளியின் மகன் வரதராஜன் 16, கவிதை எழுதி சாதனை படைத்து உள்ளார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிபாக்கியலட்சுமி மகன் வரதராஜன். அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.தமிழ் மொழியில் ஆர்வம் கொண்ட இவர், தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், ஆசிரியர் செந்தில்குமார் ஊக்குவிப்பால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று கவிஞர், கவிமாமணி, பாவலர் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளார்.

சென்னையில் கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம் சார்பில் நடந்த போட்டியில் 1130 பேர் இணைந்து கவிதை எழுதினர். இதில் வரதராஜன் 'மீண்டும் கற்காலம் போவோம்' கவிதை எழுதியதற்காக சாதனையாளர் விருது பெற்றார். கவிதை, கட்டுரை, கதை, பாடல் உள்ளிட்ட பன்முக திறமைகளின் முகமாக இருக்கும் வரதராஜனை 82205 74435ல் பாராட்டலாம்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X