பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் வளர்ச்சிக்கு அமைச்சர்கள் குழு தயார்

Updated : ஆக 28, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி : காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகளுக்கான ப்ளூபிரின்ட் தயார் செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் தவார் சந்த் கெலட், ஜிதேந்திர் சிங், நரேந்திர தோமர், தர்மேந்திர பிரதான் ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது குறித்து இந்த அமைச்சர்கள் குழு ஏற்கனவே 2 முறை கூடி ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.




காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு வளர்ச்சி திட்டங்களை உருவாக்குவதற்காக ப்ளூபிரின்ட் தயாரிக்கவும் இந்த குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை, சமூகநீதி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கிராமப்புற வளர்ச்சி, பெட்ரொலியம் மற்றும் எரிவாயு துறை, இரும்பு துறை ஆகியவற்றின் மூலம் காஷ்மீர் வளர்ச்சியில் எந்த அளவிற்கு பங்களிக்க முடியும் என கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது.





இந்த அமைச்சர்கள் குழு தங்களின் பரிந்துரைகள், யோசனைகள் அடங்கிய அறிக்கையை அக்டோபர் 31 ம் தேதி மத்திய அரசிடம் அளிக்க உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மற்றொரு பொருளாதார சலுகையை பிரதமர் மோடி காஷ்மீருக்கு வழங்குவார் என கூறப்படுகிறது. இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியனவே இந்த அமைச்சர்கள் குழுவின் முக்கிய அம்சமாக கவனம் செலுத்தப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-ஆக-201920:38:11 IST Report Abuse
Ramesh Sargam அமைச்சர்கள் குழு தயார். ஆனால் அங்குள்ள மக்களும் இவர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இல்லையென்றால், நிலைமை மாறாது.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
28-ஆக-201916:38:51 IST Report Abuse
Siva உஷார்.... நல்லதை நாம் மட்டும் நினைத்தால் போதாது... எனவே உஷார்.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
28-ஆக-201916:21:50 IST Report Abuse
GB.ரிஸ்வான் நாடுநாடாக சென்று அனைவரையும் காஷ்மீருக்கு கூப்பிடும் பிரதமர் உள்ளூரில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்கட்சியினரை வர தடை என்பது ஏனோ?
Rate this:
Share this comment
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
29-ஆக-201901:22:53 IST Report Abuse
Rajஅவர்களுடைய உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டுமென்பதற்காக. ஏன்னா, இதுவரை நடக்காத அசம்பாவிதம் இவர்கள் போகும் போது அரங்கேற்ற அங்கு பலரும் தயாராக உள்ளதை அறிந்து எடுக்கப்பட்ட முடிவு என கொள்ளலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X