பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆருக்கு இணையாக விஜய்: உசுப்பேற்றும் அம்மா

Updated : ஆக 29, 2019 | Added : ஆக 28, 2019 | கருத்துகள் (105)
Share
Advertisement
சென்னை: சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல், தேமே என்று தான் பாட்டுக்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் நடிகர் விஜய்யை, அடுத்த சூப்பர் ஸ்டார் நீ தான் என்று கூறி, அவரது அம்மாவே உசுப்பேற்றி உள்ளார்.அதிலும் எம்ஜிஆருக்கு இணையாக விஜய்யைக் கூறி உள்ளது, அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழ்த் திரையுலகத்தில் அடிக்கடி 'யார் அடுத்த சூப்பர் ஸ்டார்'

சென்னை: சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல், தேமே என்று தான் பாட்டுக்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் நடிகர் விஜய்யை, அடுத்த சூப்பர் ஸ்டார் நீ தான் என்று கூறி, அவரது அம்மாவே உசுப்பேற்றி உள்ளார்.அதிலும் எம்ஜிஆருக்கு இணையாக விஜய்யைக் கூறி உள்ளது, அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்த் திரையுலகத்தில் அடிக்கடி 'யார் அடுத்த சூப்பர் ஸ்டார்' என்ற சர்ச்சை வந்து கொண்டேயிருக்கும். ஏற்கனவே மகன் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வெளிப்படையாக பேசி வருகிறார் அவரது தந்தை சந்திரசேகர். இப்போது விஜய்யின் அம்மா ஷோபாவுக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது. விஜய்க்கு அம்மா ஷோபா எழுதிய கடிதம் ஒன்று சூப்பர் ஸ்டார் பற்றி மீண்டும் பரபரப்பாகி உள்ளது.



latest tamil news




அந்த கடிதத்தில், ‛‛நான் பெற்ற பிள்ளை இன்று கோடானு கோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும், தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் ஈரம் கசிந்து வழிகிறது.

“எம்கே தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதையெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்” என முடித்துள்ளார்.


latest tamil news



இதில் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜய்யை, அவரே குறிப்பிட்டுள்ளார். அதாவது பரவாயில்லை, எம்.ஜி.ஆர்., வரிசையில் விஜய்யையும் கொண்டு வந்துள்ளார். இது தான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணமாகி உள்ளது.

ஏற்கனவே ரஜினிக்கு அடுத்து விஜய், ரஜினியை முந்திய விஜய் என்று சிலர் அவரை கொம்பு சீவி வருகின்றனர். அதிலும் ரஜினியின் அரசியல் வருகையை கண்டு பயப்படும் சில துக்கடா கட்சி தலைவர்கள், ரஜினியை மட்டம் தட்ட, விஜய் பெயரை பயன்படுத்தி வருகின்றனர்.


latest tamil news



இப்போது எம்ஜிஆர் வரிசையில் விஜய்யை அவரது அம்மாவே கொண்டு வந்தது. அதிமுகவினரின் கோபத்தையும் கிளறி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil arasu - karumathur,இந்தியா
29-ஆக-201918:20:06 IST Report Abuse
tamil arasu தல அஜித் இருக்கும்போது வாலு விஜய் ஆடக்கூடாது
Rate this:
Cancel
tamil arasu - karumathur,இந்தியா
29-ஆக-201918:19:10 IST Report Abuse
tamil arasu தல (அஜித்) இருக்கும்போது வாலு (விஜய்) ஆடக்கூடாது
Rate this:
Cancel
badhri - chennai,இந்தியா
29-ஆக-201915:24:47 IST Report Abuse
badhri தமிழ் திரை உலகில் MGR க்கு அப்பறம் எங்கள் அண்ணன் தளபதி விஜய்க்கு தான் பெண்கள் ரசிகர் அதிகம் இது இந்த ஊடகங்களுக்கு தெரியும் திரை உலகில் எங்க அண்ணா MGR விட ஒரு படி மேல தான் இருக்காரு MGR மார்க்கெட் தமிழ் நாட்டுல மட்டும் தான் தளபதி யின் படங்கள் கேரளா முதல் உலகம் முழுவதும் நல்ல வியாபாரம் ஆகுது அதுனால எங்க அண்ணன் MGR விட மாஸ் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X