திருமூர்த்தி அணைக்கு செப்.,1ல் நீர் வரத்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருமூர்த்தி அணைக்கு செப்.,1ல் நீர் வரத்து

Added : ஆக 29, 2019
Share
உடுமலை : திருமூர்த்தி அணைக்கு, வரும், 1ம் தேதி முதல் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, செப்.,15ல், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு, பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பி.ஏ.பி., திட்டத்தில் பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக

உடுமலை : திருமூர்த்தி அணைக்கு, வரும், 1ம் தேதி முதல் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, செப்.,15ல், பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு, பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பி.ஏ.பி., திட்டத்தில் பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.கடந்த, 8ம் தேதி சர்க்கார்பதி பகுதியில் கன மழை பெய்த போது, மலைப்பகுதியில் இருந்து மழைநீருடன் அடித்து வரப்பட்ட பாறைகள், கற்கள், மண், மரங்கள் காண்டூர் கால்வாயில் விழுந்தன.சர்க்கார்பதியில் இருந்து, 400 மீட்டர் வரை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.

காண்டூர் கால்வாயில் இருந்து வழிந்து சென்ற தண்ணீர், ஆழியாறு ஊட்டுக்கால்வாய், 12.5 கி.மீ.,ல் சேதம் ஏற்படுத்தியது.இதனையடுத்து, காண்டூர் கால்வாய் சீரைமப்பு பணிகளை அதிகாரிகள் துவக்கினர்.துாணக்கடவிலிருந்து சர்க்கார்பதிக்கு நீர் கொண்டு வரும் பகுதியில், பக்கவாட்டு சுவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு, பக்கவாட்டு சுவர் மற்றும் பாதை அமைக்கப்படுகிறது.பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி கூறியதாவது:காண்டூர் கால்வாய் மற்றும் ஆழியாறு ஊட்டுக்கால்வாயில் இருந்த மண், பாறைகள் அகற்றப்பட்டுள்ளன.

காண்டூர் கால்வாயில் சேதமடைந்த பகுதியில், கான்கிரீட் அமைக்கும் பணி நடக்கிறது. துாணக்கடவில் இருந்து, சர்க்கார்பதிக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாயில் உள்ள பாறைகளை அகற்றும் பணியும் நடக்கிறது.சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளில் இருக்கும் தண்ணீரை, திருமூர்த்தி அணைக்கு கொண்டு சென்றால் தான் பாசனத்துக்கு வழங்க முடியும். அதனால், பணியை வேகப்படுத்தி வருகிறோம்.வரும் செப்., 1ம் தேதிக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அன்றில் இருந்து, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லவும்; செப்., 15 முதல் திருமூர்த்தி அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு, தெரிவித்தார்.அணை நீர் மட்டம்வெள்ள பாதிப்பால் காண்டூர் கால்வாய் சிதிலமடைந்ததால், ஆக.,15ல், பாசனத்திற்கு நீர் திறப்பது, ஒரு மாதம் தாமதமானது. திருமூர்த்தி அணைக்கும் நீர்வரத்து இல்லாததால், அணை நீர்மட்டமும் சரிந்து காணப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 15.99 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 6 கன அடியாகவும், அணையிலிருந்து, குடிநீருக்கு, வினாடிக்கு, 24 கன அடி நீரும் திறக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X