பொது செய்தி

தமிழ்நாடு

காலில் விழும் கலாசாரம் மீண்டும்..

Updated : ஆக 29, 2019 | Added : ஆக 29, 2019 | கருத்துகள் (36)
Share
Advertisement

சென்னை: வெளிநாடு புறப்பட்ட, முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், இ.பி.எஸ்., காலில் விழுந்து, ஆசி பெற்றனர்.



latest tamil news



ஜெயலலிதா, முதல்வராக இருந்தவரை, வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றதில்லை. அவர், விழாக்களில் பங்கேற்கும் போதும், வெளியூர் செல்லும் போதும், கட்சியினர், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, காலில் விழுவர். அவர் மறைவுக்கு பின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சசிகலா காலில் விழ துவங்கினர். அவர் சிறை சென்ற பின், அ.தி.மு.க.,வில், காலில் விழும் கலாசாரம் ஓய்ந்திருந்தது.


latest tamil news



நீண்ட இடைவெளிக்கு பின், காலில் விழும் கலாசாரம், அக்கட்சியில், மீண்டும் துவங்கி உள்ளது. முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, வெளிநாடு சுற்றுப்பயணம் கிளம்பினார். அவரை வழியனுப்புதற்காக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்துடன் திரண்டனர்.அனைவரும் வரிசையாக நின்று, முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, முன்னாள் அமைச்சர்கள், ரமணா, மூர்த்தி, சண்முகநாதன், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் என, அனைவரும் வரிசையாக, முதல்வர் காலை தொட்டு வணங்கினர்; முதல்வரும் தடுக்கவில்லை. ஜெயலலிதாவை சந்திக்கும்போது, பயபக்தியுடன் பணிந்து, பூங்கொத்து வழங்குவது போல், அமைச்சர்கள், நேற்று முதல்வரிடம் பூங்கொத்து கொடுத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-செப்-201916:18:19 IST Report Abuse
Malick Raja உழைப்பை விரும்பாதவர்கள் எண்ணிக்கையை காலில் விழுபர்களின் எண்ணிக்கையில் காணலாம் அவர்களுக்கெல்லாம் ஒருவார்த்தையில் ..மணம்போய் உயிர்க்காவலா . என்பது மட்டுமே சரியாக இருக்கும்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
31-ஆக-201900:30:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பரப்பன அக்கிரகாரம் பாடம் சொல்லி தரவில்லையா?
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
30-ஆக-201911:48:45 IST Report Abuse
karutthu காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க தகுதி உள்ளவர்கள்: தாய் தந்தை குரு (ஆசிரியர் -வயது முக்கியமில்லை) அறுவது வயதை கடந்த நல்ல ஒழுக்கமுள்ள தம்பதியினர் (சாதி வித்தியாசமில்லை) கடவுள் சந்நிதி மடாதிபதிகள் (நித்தியானந்தா விடம் கூடாது) தன் வயதிற்கு மேல் உள்ள உடன் பிறந்த சகோதர சகோதரிகள் . வேறு யாரிடமும் விழ தேவை இல்லை .
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
31-ஆக-201911:28:39 IST Report Abuse
பெரிய ராசு மிக அருமையான பதிவு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X