சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மாடுகள் கடல்பாசி உண்டால் என்ன ஆகும்?

Added : ஆக 29, 2019 | கருத்துகள் (5)
Advertisement
மாடுகள் கடல்பாசி உண்டால் என்ன ஆகும்?

மாடு வளர்ப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் கேடுகள் பல உண்டு. அதில் மாடுகள் விடும் ஏப்பம், பின் வழியே வெளியேற்றும் வாயு ஆகியவற்றில் உள்ள மீத்தேன், புவி வெப்பமாதலுக்கு வழி வகுக்கிறது.

மாடுகள் எடுத்துக்கொள்ளும் தீவனத்தில் சிலவகை கடல் பாசிகளை சேர்த்தால், 99 சதவீத மீத்தேன் வெளியேற்றத்தை நிறுத்த முடியும் என, ஆஸ்திரேலியாவிலுள்ள குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

மாடுகள் தீவனத்துடன் கலந்த கடல் பாசிகள், மாட்டின் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகளில், மீத்தேன் உற்பத்திக்கு உதவும் நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது. இதனால்தான் மாடுகள் வெளியேற்றும் மீத்தேன் வாயுவின் அளவு அடியோடு குறைந்து விடுகிறது.

அதே சமயம், கடல்பாசி கலந்த தீவனத்தை உண்ணும் மாடுகள் தரும் பால் மற்றும் இறைச்சிகளின் தரத்தில் எந்த மாற்றமும் இருப்பதில்லை எனவும் குவீன்ஸ்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

தற்போது எந்த வகை கடல்பாசிகள் அதிக அளவு மீத்தேன் வெளியேற்றத்தை தடுக்கும் என்ற ஆராய்ச்சி தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
09-செப்-201920:19:41 IST Report Abuse
Sampath Kumar நல்லவரு எத்தனை ஸ்பூன் உப்பு சாப்பிடுகிறார் ??? பாத்து சார் உங்க கிட்னி நல்ல இருக்கானு பாத்து விட்டு பதிவு போடுங்க
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-செப்-201918:05:30 IST Report Abuse
Endrum Indian கடல் பாசி விற்கவேண்டும் அதற்குத்தான் இந்த டப்பா தட்டும் விளம்பரம்???இந்தியாவில் 78% பேர் சர்ககரைவியாதி உள்ளவர்கள் அதாவது 84 கோடி பேர் . இப்படி பயமுறுத்தி இந்த மருந்தை உபயோகி உனது வியாதி கட்டுக்குள் இருக்கும். அதாவது இந்த மருந்து ரூ 10 என்றே வைத்துக்கொள்வோம் வருடத்திற்கு ஒருவன் ரூ . 3650 அப்படியென்றால் 84 கோடி மக்கள் உபயோகித்தால் ரூ . 3 லட்சம் கோடி வியாபாரம் இதுக்கு பல நுணுக்கங்களை சொல்வது???அசதியாக இருக்கும் , மூத்திரப்பியில் எரிச்சல் இருக்கும், உடலில் அரிப்பு எடுக்கும் , இதை நீட்டித்தல் உனக்கு சிறுநீரக கோளாறு, இதய கோளாறு வரும் என்றெல்லாம் . ஆகவே இவனுங்க சொல்றதை Take it with a pinch of Salt .
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-செப்-201909:37:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்Take it with a pinch of Salt .உப்போடு சாப்பிட்டா தான் பிளாட் பிரஷர் அதிகமாகி கிட்னி கோளாறாகும்.. LOL.....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-செப்-201915:37:46 IST Report Abuse
Nallavan Nallavanஉண்மை ..............
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-செப்-201900:01:34 IST Report Abuse
Nallavan Nallavanசெத்தபுரம் ........ அவரு சொல்றது ஒரு சிட்டிகை உப்பு ............ சிட்டிகை -ன்னா என்ன அளவு -ன்னு தெரியுமா ??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X