அதிக காலம் சிறையில் இருந்தால் தலைவராகலாம்

Updated : ஆக 29, 2019 | Added : ஆக 29, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
ஸ்ரீநகர் : நீண்ட காலம் சிறையில் இருந்தால், வெளியில் வரும் போது அதிக ஓட்டுக்களை பெற்று, பெரிய தலைவராக முடியும் என காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.ராஜ்பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், காஷ்மீர் அரசு பணியில் காலியாக உள்ள 50,000 க்கும் அதிகமான பணியிடங்கள் வரும் மாதங்களில் நிரப்பப்படும். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக

ஸ்ரீநகர் : நீண்ட காலம் சிறையில் இருந்தால், வெளியில் வரும் போது அதிக ஓட்டுக்களை பெற்று, பெரிய தலைவராக முடியும் என காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.



latest tamil news


ராஜ்பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், காஷ்மீர் அரசு பணியில் காலியாக உள்ள 50,000 க்கும் அதிகமான பணியிடங்கள் வரும் மாதங்களில் நிரப்பப்படும். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுவதால், காஷ்மீர் மக்கள் இதில் அதிக அளவில் பங்கேற்க பயனடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


latest tamil news


ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி போன்ற தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான் 30 முறை சிறைக்கு சென்றுள்ளேன். எனக்கு அதை பற்றி நன்றாக தெரியும். எத்தனை காலம் அவர்கள் காவலில் இருக்கிறார்களோ, வெளியில் வந்த பிறகு அவ்வளவு ஓட்டுக்கள் அதிகம் பெற்று அவர்கள் வெற்றி பெறலாம். அதனால் இதனை தங்களுக்கு சாதகமானதாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். யார் சிறையில் அதிக காலம் இருக்கிறார்களோ அவர்கள் பெரிய அரசியல் தலைவர்களாக வருவார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
29-ஆக-201920:40:11 IST Report Abuse
Raghuraman Narayanan இது பலிக்கும்னா இப்போ உள்ளே இருக்கிற சில தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் மறுபடியும் ஜானின் கேக்க மாட்டாங்களா?
Rate this:
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
29-ஆக-201920:11:01 IST Report Abuse
orange mittai தம்பி கொஞ்சம் ஓவரா போறாரே...என்ன கணக்கு.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
29-ஆக-201919:16:52 IST Report Abuse
spr "யார் சிறையில் அதிக காலம் இருக்கிறார்களோ அவர்கள் பெரிய அரசியல் தலைவர்களாக வருவார்கள்" இது உண்மையென்றாலும், இவர் பதவிக்கு பொருத்தமில்லாத பொறுப்பற்ற பேச்சு. "ஊருக்கு பலன் சொல்லும் பல்லி, தான் போய் விழும் கழுநீர்ப் பானையில்.துள்ளி" திரு மோடி இவரை கண்டித்து வைக்காவிடில், அவர் பன்னாட்டு அளவில் சேர்த்து வைத்த நற்பெயர், செய்த நற்செயல்கள் எல்லாம் அழியும். பழி சேர்க்கும் ஐநா சபை வரை கொண்டு செல்லப்படும் "‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’‘ - நல்ல செயல்களைச் செய்ய இயலாது போனாலும், நல்லது அல்லாத செயல்களைச் செய்யாது ஒழுகுங்கள்) என்பது புறநானூறு சொல்வது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X