ராவல்பெண்டி : இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே முழு முனைப்புடன் பெரிய அளவிலான போர் நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்துள்ளார்.

பாக்., மீடியாக்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ராவல்பெண்டியில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அகமது பேசுகையில், காஷ்மீரை விடுவிப்பதற்கான கடைசி கட்ட போர் நடத்த நேரம் வந்து விட்டது. இம்முறை இந்தியாவுடன் நடக்கும் போர் முழு மூச்சுடனும், இறுதியானதாகவும் இருக்கும் என்றார்.
காஷ்மீரில் இந்திய பிரதமர் மோடி பிரச்னையை உருவாக்குகிறார். இந்த அனைத்து பிரச்னைக்கும் காரணமாக 'ஹிட்லர்' மோடி. காஷ்மீருக்காக அவர் போர் தொடுக்க நினைப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டு விட்டோம். காஷ்மீரின் விதியை காஷ்மீரி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஐ.நா., அல்ல. காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த தான் ஐ.நா.,வால் முடியும்.

எங்கள் அதிர்ஷ்டம் காஷ்மீர் பிரச்னையில் எங்கள் பக்கம் சீனா போன்ற நாடு உறுதுணையாக உள்ளது. மற்ற சர்வதேச அமைப்புக்கள் இதில் மவுனம் காக்கின்றன. இந்தியா மட்டுமின்றி அதை தாண்டி பகுதிகளையும் ஆதிக்கம் செலுத்துவதற்கு பாக்., தான் ஒரே தடையாக இருப்பதாக மோடி பார்க்கிறார். அதனால் தான் அவர் காஷ்மீரை அழிக்க பார்க்கிறார் என கடுமையாக விமர்சித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE