அரசியல் செய்தி

தமிழ்நாடு

காலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா?: தமிழிசை

Updated : ஆக 29, 2019 | Added : ஆக 29, 2019 | கருத்துகள் (108)
Advertisement

சென்னை : திமுக.,விற்கு சரமாரி கேள்விகளை முன்வைத்து, மிக காட்டமாக டுவீட் செய்துள்ளார் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை.





சேலம் பா.ஜ., அலுவலகத்தில் பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டுவீட் பதிவிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ., அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை இன்று (ஆக.,29) காலை வெளியிட்ட டுவீட்டில், அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா?இதுதான் சமூக செயல்பாடா?சமூக அமைதி சீர்குலைப்பா?சமூகஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்! இதையே அறிவாலயம் அனுமதிக்குமா?




அன்று யாரோ எங்கேயோ பேசியதற்காக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும்,என்னையும் மற்றும் காவலர்களையும் காயப்படுத்தி தாக்கியது திமுக என்பது கடந்தகால வரலாறு...





சேலம் ஆடிட்டர் ரமேஷ்,வேலூர் வெள்ளையப்பன் போன்ற அப்பாவி பாஜ தலைவர்களையும்,தொண்டர்களையும் வெட்டி சாய்த்தும் கோவையில் குண்டு வைத்து கொலைவெறி தாண்டவமாடிய பாவிகளுக்கும் ஓட்டு வங்கி அரசியலுக்காக பரிந்து பேசும் திமுகதான் மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் அப்பாவி பத்திரிக்கையாளர்களை தங்கள் குடும்பத்திற்குள் நடைபெற்ற பதவி கவுரவம் பற்றிய வம்புச்சண்டைக்காக உயிர் பலி வாங்கியதையும் தமிழகம் நினைவில் வைத்திருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nanbaenda - chennai,இந்தியா
29-ஆக-201920:47:42 IST Report Abuse
nanbaenda தி மு க கூட்டணியை எதிர்பார்த்துகிட்டே இருக்காம முதல்லே மாரிதாஸுக்கு குரல் கொடும்மா.
Rate this:
Share this comment
PALANIAPPAN - MADURAI,இந்தியா
31-ஆக-201916:05:38 IST Report Abuse
PALANIAPPANமாரிதாஸ்க்கு ஏன் இன்னும் சப்போர்ட் பண்ணி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருக்கிறார்கள் ....
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
29-ஆக-201919:51:56 IST Report Abuse
Sampath Kumar உங்க அப்பா கிட்ட கேளு உன்னை விட அனுபவம் உள்ளவரு
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
29-ஆக-201919:38:51 IST Report Abuse
Sampath Kumar ஆக எல்லா பாக்கி களும் ஒரு முடி ஓடுதான் அலையுறாங்க கவுண்டமணி சூன் மாதிரி வரும் வேட்டி போட்டு வேண்டாம் இப்ப பன்னிட்டு அப்பரும் இன் பண்ணி ருவங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X