பொது செய்தி

இந்தியா

2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்?

Updated : ஆக 29, 2019 | Added : ஆக 29, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement

ஐதராபாத்: நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டு அச்சடிப்பதை நிறுத்த ஆர்.பி.ஐ.. முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.latest tamil news
கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து முன்னர் புழக்கத்திலிருந்த ரூ.1,000 , ரூ. 500 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிதாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ஆர்.பி.ஐ. எனப்படும் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தின. இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன.


latest tamil news
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்து வந்த ரூ.2000- பணப்புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2017-18 நிதியாண்டின் போது 6,72,600 கோடி அளவிற்கு இருந்த இதன் எண்ணிக்கை 2018-19 ம் ஆண்டில் 6,58,200 ஆக குறைந்துள்ளது. சுமார் 14, 400 கோடி அளவிற்கு அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் மதி்ப்பு 2018-ம் வருட நிதியாண்டில் 37 சதவீதத்தில் இருந்து 2019-ம் ஆண்டு நிதியாண்டில் 39 சதவீதமாக இருந்தது.மேலும் பல்வேறு மதிப்புள்ள நோட்டுகளின் மதிப்பு 43 சதவீத்தில் இருந்து 51 சதவீதமாக அதிகரித்துள்ளது.


latest tamil newsஇதனை தொடர்ந்து ஆர்.பி.ஐ., நடப்பு நிதியாண்டில் ரூ. 2,000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 151 மில்லியன் அளவில் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை 47 மில்லியன் அளவாக குறைத்துள்ளது. அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை 11,692 மில்லியனாக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
30-ஆக-201919:18:44 IST Report Abuse
Ray ஆமாங்க எவ்வளவு நோட்டு அடிச்சாலும் எங்கே போவுதுன்னே தெரியலை அப்றம் என்னபண்றது?
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
30-ஆக-201913:33:23 IST Report Abuse
Nallavan Nallavan The decision to stop printing more Rs 2,000 notes was taken after Modi government became suspicious that the high-denomination currency note is being used for money laundering, tax evasion and hoarding, a report by ThePrint said. Close on the heels of these suspicions, the RBI has decided to stop the printing of Rs 2,000 to reduce their circulation என்று சொல்கிறது பிசினஸ் டுடே ....... ஏற்கிறேன் ........... அரசின் நிகழ் கால முடிவு சரியானதே ..... ஆனால் இதே பாஜக அரசு, பணப்புழக்கத்தைக் குறைக்க வேண்டிய பொறுப்பில் இருந்த, இருக்கும் , இருக்க வேண்டிய அரசு, ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புள்ள ரூபாய் இரண்டாயிரத்தை வெளியிட்டிருக்கக் கூடாதே ??
Rate this:
Cheran - Kongu seemai,இந்தியா
30-ஆக-201922:08:17 IST Report Abuse
Cheranஇரண்டாயிரத்தை வெளியிட்டிருக்கக் கூடாதே ?? துக்ளக் தர்பார் , காமெடி அரசவை இது. அப்படிதான் செய்வார்கள்....
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
30-ஆக-201909:06:19 IST Report Abuse
அம்பி ஐயர் மொத்தத்துல பணத்தையே கண்ணுல காட்டாதீங்க.... ஒன்லி அக்கவுண்ட்ல மட்டும் தான் நம்பர் வகையில காட்டணும்.... பணம் அச்சடிக்கிறதையே நிறுத்திப்புடலாம்.... எல்லாம் டிஜிட்டல் தான்.....
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
30-ஆக-201913:08:51 IST Report Abuse
Nallavan Nallavanஉங்க பேருக்குப் பின்னாடி இருக்குற அது நீங்க வாங்குன பட்டமா ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X