அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசிடம் ஆதாயம் தேடாதீங்க! :தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

Updated : ஆக 30, 2019 | Added : ஆக 29, 2019 | கருத்துகள் (60)
Advertisement
மத்திய, அரசிடம் ,ஆதாயம்,தேடாதீங்க!,தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு ,ஸ்டாலின், உத்தரவு

சென்னை,:'தி.மு.க. - எம்.பி.க்கள் யாரும் மத்திய அரசிடம் தனிப்பட்ட முறையில் எந்த ஆதாயத்தையும் பெறக் கூடாது' என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராஜா, சிவா, தயாநிதி எஸ்.ஆர்.பார்த்திபன், கதிர்ஆனந்த் உட்பட 25 பேர் பங்கேற்றனர்.அதில் எம்.பி.க்களுக்கு சில அதிரடி உத்தரவுகளை ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அதன் விபரம்:

லோக்சபா தேர்தல் வெற்றியின் வாயிலாக நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உருவெடுத்துள்ளது. தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும்.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடாத மக்கள் வசிக்கும் பகுதி என எந்தபகுதியையும் புறக்கணிக்கக் கூடாது; அங்குள்ள மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

சட்டசபை தொகுதி வாரியாக எம்.பி. குறை தீர்க்கும் அலுவலகம் திறக்க வேண்டும். அங்கு பொது மக்கள் தரும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். தொகுதி மக்களின் குறை தீர்க்கும் பணிகள் குறித்தும் நிறைவேற்றிய வளர்ச்சி பணிகள் குறித்தும் மாதம்தோறும் என்னிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய அரசிடம் தனிப்பட்ட முறையில் எந்த ஆதாயத்தையும் பெறும் வகையில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் இருக்கக் கூடாது. அத்தகைய தகவல் எம்.பி.க்களுக்கு மட்டுமல்ல; கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விடும். எந்தவொரு சிறிய குற்றச்சாட்டிற்கும் இடம் கொடுத்து விடக் கூடாது.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


எடை போடுவதில்லை!



கூட்டம் முடிந்த பின் ஸ்டாலின் அளித்த பேட்டி: லோக்சபாவில் எம்.பி.க்கள் ஆற்றியிருக்கும் பணிகள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தோம். தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில் சோதனைகளை, சாதனைகளை நான் எடை போட்டு பார்ப்பதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
31-ஆக-201900:39:47 IST Report Abuse
Ramasami Venkatesan இதை எல்லாவற்றுக்கும் பெயர் போன (?) திமுக சொல்கிறது கேட்டுக்கொள்ளுங்கள். இப்பவே இப் படி காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்திருந்தார்???????
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-ஆக-201922:37:57 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில் சோதனைகளை, சாதனைகளை நான் எடை போட்டு பார்ப்பதில்லை.இவ்வாறு அவர் கூறினார். //// அதுக்குள்ளே நிருபர்கள் பர்பாமென்ஸ் பத்திக் கேட்டுட்டானுங்க போலிருக்கே ?? யார்கிட்ட ??
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-ஆக-201922:36:37 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடாத மக்கள் வசிக்கும் பகுதி என எந்தபகுதியையும் புறக்கணிக்கக் கூடாது அங்குள்ள மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். //// ஓட்டுப்போட்டவங்களுக்கு நன்றி -ன்னா புரிஞ்சுக்க முடியுது ............... போடாதவங்களுக்குமா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X