ஏற்றுமதியாளர் சங்க நிர்வாக தேர்தலில் போட்டி உறுதி! சமாதான முயற்சி தோல்வி அடைந்தது

Updated : ஆக 30, 2019 | Added : ஆக 29, 2019 | |
Advertisement
திருப்பூர்:பேச்சுவார்த்தைகள் பலன் தராததால், ஏற்றுமதியாளர் சங்க தேர்தலில், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர் பதவிகளுக்கு போட்டி உறுதியாகியுள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல், வரும் செப்டம்பர் 20ல் நடைபெறுகிறது. கடந்த 21ல் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது; 26ம் தேதியுடன், வேட்பு மனு வாபஸ் முடிந்தது.தேர்தல் அதிகாரி வீரராகவன், கடந்த 27 ம் தேதி, வேட்பாளர் இறுதிப்
ஏற்றுமதியாளர் சங்க நிர்வாக தேர்தலில் போட்டி உறுதி! சமாதான முயற்சி தோல்வி அடைந்தது

திருப்பூர்:பேச்சுவார்த்தைகள் பலன் தராததால், ஏற்றுமதியாளர் சங்க தேர்தலில், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர் பதவிகளுக்கு போட்டி உறுதியாகியுள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல், வரும் செப்டம்பர் 20ல் நடைபெறுகிறது. கடந்த 21ல் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது; 26ம் தேதியுடன், வேட்பு மனு வாபஸ் முடிந்தது.தேர்தல் அதிகாரி வீரராகவன், கடந்த 27 ம் தேதி, வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிட்டார்.

தலைவர், துணை தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டி இல்லை.அதனால், சங்க தலைவராக மீண்டும் ராஜாசண்முகம்; துணை தலைவர்களாக பழனிசாமி, வேலுசாமி; பொருளாளராக மோகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.20 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 26 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் ஆறு பேர் வாபஸ் பெற்றதால், 20 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஒரு பொதுச்செயலாளர் பதவிக்கு, தற்போது அப்பதவி வகிக்கும் விஜயகுமாரை எதிர்த்து குமார்; 2 இணைச் செயலாளர் பதவிக்கு, சோமசுந்தரம், செந்தில்குமார், அருண்ராமசாமி, ராஜேந்திரன் ஆகிய நான்குபேர் மனு தாக்கல் செய்தனர்.


மனுக்கள் வாபஸ் பெறப்படாததால், இவ்விரு பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவதாக, கடந்த 27 ல் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர் பதவிகளுக்கு போட்டியின்றி நிர்வாகிகளை தேர்வு செய்யும்வகையில், இருதரப்பினர் தங்களுக்குள் பேச்சுவார்த்தையை துவக்கினர்.கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.


பேச்சில் சுமூக தீர்வு காணப்படும்; போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.எதிர்பார்ப்புக்கு மாறாக, இருதரப்பினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. வேட்பாளர் யாரும் மனுவை வாபஸ் பெறவில்லை.எனேவே, பொதுச்செயலாளர், இணைச்செயலாளர் பதவிகளுக்கு, தேர்தல் உறுதியாகியுள்ளது.போட்டி நிலை உறுதியாகியுள்ளதையடுத்து, சங்க தேர்தல் களமும் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது.


வெற்றியை கைப்பற்றுவதற்காக, வேட்பாளர்கள், தங்கள் ஆதரவாளர் சகிதம், உறுப்பினர்களை சந்தித்து, ஓட்டு சேகரிப்பில் ஈடுபடத்துவங்கியுள்ளனர்.உறுப்பினர்களை நேரில் சந்தித்தும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்கள் மூலமாகவும், பிரசாரம் செய்கின்றனர்.வரும் செப்டம்பர் 20ம் தேதி, அப்பாச்சி நகரில் உள்ள ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.சங்கத்தில், ஆயிரத்து 90 உறுப்பினர்கள் உள்ளனர்; இவர்களுக்கு ஓட்டளிக்கும் தகுதி உள்ளது. ஓட்டுப்பெட்டி, ஓட்டுச்சீட்டு தயாரிப்பு என, தேர்தல் பணிகள் துவங்க உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X